"செல்லம்.. ஏமாத்துவியா".. சமைத்து கொண்டிருந்த திலகவதியிடம்.. நைஸா கேட்ட சுப்ரமணி.. திகைத்த அசோக்நகர்
காய்கறி நறுக்கும் கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்த நபரை கைது செய்துள்ளனர்
சென்னை: கணவன் பேசப்பேச கண்டுகொள்ளாமல் சென்றுள்ளார் மனைவி திலகவதி.. இதற்கு பிறகுதான் அந்த பயங்கரம் நடந்துள்ளது.. போலீசார் இதுகுறித்த விசாரணையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும், சென்னையில் இந்த அதிர்ச்சி இன்னும் நீங்கவில்லை.
சென்னை எம்ஜிஆர்நகர், விபி அகிலன் தெரு பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணி.. 46 வயதாகிறது.. மனைவி பெயர் திலகவதி.. 35 வயதாகிறது..
வள்ளுவர் கோட்டம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் டைப்பிஸ்ட்டாக வேலை பார்த்து வருகிறார். இது ஒரு திருமண பத்திரிகை மையம் ஆகும்.

கல்யாணம்
இவர்களுக்கு திருமணமாகி 14 வருடங்கள் ஆகிறது.. 12 வயதில் 7-ம் வகுப்பு படித்து வரும் மகள் உள்ளார்... ஆனால், கல்யாணம் ஆன முதல் நாளில் இருந்தே திலகவதியுடன் சுப்பிரமணிக்கு சண்டையாம்.. அன்றைய தினமே குடித்துவிட்டு வந்துள்ளார்.. அப்போதுதான் தகராறு தம்பதிக்குள் வெடித்துள்ளது.. அதுமட்டுமல்ல, கல்யாணம் ஆன முதல்நாளே, திலகவதி மீது சந்தேகமும் வந்துள்ளது சுப்பிரமணிக்கு.. இதனால், இந்த சந்தேகத்தை சாக்காக வைத்துக் கொண்டு, தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து பிரச்சினை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

காய் நறுக்கும் கத்தி
பல பேருடன் திலகவதிக்கு தொடர்பு இருப்பதாக சொல்லி, சண்டை போட்டு வந்துள்ளார்.. அப்படித்தான் நேற்று காலையிலேயே குடித்துவிட்டு, வீட்டில் கலாட்டா செய்துகொண்டிருந்தார் சுப்பிரமணி.. ஆனால், திலகவதியோ, எதையும் கண்டுகொள்ளாமல், கிச்சனில் சமையல் செய்து கொண்டிருந்தார்.. நேராக கிச்சனுக்குள் நுழைந்த சுப்பிரமணி, காய்நறுக்கும் சிறிய கத்தியை எடுத்து வந்து, திலகவதியிடம் தந்தார். "இந்தா, என் கழுத்தை அறுத்துவிடு" என்று சொல்லி கத்தியை நீட்டினார்..

கழுத்தறுப்பு
அப்போதும் திலகவதி, அவரை கண்டுகொள்ளாமல் சமையல் வேலையை பார்த்து கொண்டிருந்தார்.. இதனால், ஆத்திரமடைந்த சுப்பிரமணி, அப்படின்னா, நான் உன் கழுத்தை அறுக்கிறேன் என்று சொல்லிவிட்டு, திலகவதியின் கழுத்தை அறுத்துவிட்டார்.. அதுமட்டுமல்ல, அங்கே தூங்கி கொண்டிருந்த 12 வயது மகளின் கழுத்தையும் அறுத்துவிட்டார்.. தாயும், மகளும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அலறினார்கள்.. ஆனால், அதற்குள் சுப்பிரமணி அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..

8 தையல் 4 தையல்கள்
திலகவதிக்கு கழுத்தில் 8 தையல்களும், அவரது 12 வயது மகளுக்கு 4 தையல்களும் போடப்பட்டுள்ளது.. தொடர்ந்து இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. இதனிடையே, மனைவி, மகளை கத்தியால் குத்தியது தொடர்பாக, தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த எம்ஜிஆர் நகர் போலீஸார் திலகவதியிடம், புகாரைப் பெற்றனர்.. அந்த புகாரின் அடிப்படையில் தப்பியோடிய சுப்பிரமணியை தேடி வந்தனர்... ஆனால், போலீசாரிடம் சிக்கினால் அவ்வளவுதான் என்று பயந்துபோன சுப்பிரமணி, அசோக் பில்லர் மெட்ரோ மேம்பாலம் மீது ஏறி நின்றுகொண்டார்..

கழுத்தில் கத்தி
கையில் ஒரு கத்தியையும் எடுத்துக் கொண்டு, தன் கழுத்தை லேசாக வெட்டிக் கொண்டார்.. பிறகு, தற்கொலை மிரட்டலும் விடுத்தார்.. அதற்குள் அசோக் நகர் தீயணைப்புத் துறையினர் அங்கு வந்து விரைந்து சென்று, சுப்பிரமணியை சுற்றிவளைத்து பிடித்து, எம்ஜிஆர் நகர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்... கழுத்தில் லேசாக கீறிக்கொண்டதால், சுப்பிரமணியனை கேகே நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சையும் தந்தனர்.. இப்போது மாமியார் வீட்டுக்கு போயிருக்கிறார் சுப்பிரமணி.. அங்கே ஸ்பெஷலாக கவனித்து கொண்டிருக்கிறார்கள் நம் போலீசார்..!!!

சின்ன கத்தி
சுப்பிரமணி எம்ஜிஆர் நகர் பகுதியிலேயே கூலி வேலை செய்து வருபவராம்.. ஆனால் அந்த பணத்தில் தினமும் குடித்துவிடுவதால், வீட்டு செலவுக்கு பணம் தராமல் இருந்து வந்துள்ளார்.. அதனாலேயே, திலகவதி வேலைக்கு செல்ல ஆரம்பித்துள்ளார்.. கோடம்பாக்கத்தில் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கும் கம்பெனியில் டைப்பிஸ்ட்டாக வேலை பார்த்து வந்துதான், மகளை படிக்க வைத்து வருகிறாராம்.. தொடர் சிகிச்சையில் திலகவதியும், மகளும் தற்போது இருந்துவரும் நிலையில், சுப்பிரமணியன் மீது, பெண் வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.. அவரிடம் உள்ள காய்கறி வெட்டும் கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகிறார்கள்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications