Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்ச் வாசலில்.. சுருண்டு விழுந்த உயிரைவிட்ட ஜோடி.. காருக்குள் கதறிய பிஞ்சுகள்.. பதறிய மக்கள்

கன்னியாகுமரியில் கள்ளக்காதல் ஜோடியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: இந்த குமரி மாவட்டத்துக்கு என்னதான் ஆச்சு? இன்னொரு பயங்கரமும் நடந்துள்ளது.. அசையாமல் நின்றிருந்த காரை பார்த்ததுமே பொதுமக்கள் பதட்டமடைந்து போலீசுக்கு ஓடினார்கள்.. தற்போது விசாரணையும் இது தொடர்பாக நடந்து கொண்டிருக்கிறது.

2 நாட்களுக்கு முன்பு தற்கொலை சம்பவம் ஒன்று ஆரல்வாய்மொழியில் நடந்தது.. குளச்சல் கடியப்பட்டணம் கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஷாமினி.. 29 வயதாகிறது.. அதே ஊரை சேர்ந்தவர் சூசைநாதன்.. 36 வயதாகிறது.

ஷாமினியின் கணவர் பெயர் ராஜேஷ்.. இந்த தம்பதிக்கு 7 மற்றும் 3 வயதுள்ள 2 மகன்கள் இருக்கிறார்கள்.. அதேபோல சூசைநாதனுக்கும் 4 வருடம் முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.

சூசைநாதன்

சூசைநாதன்

ஷாமினிக்கும், சூசைநாதனுக்கும் கள்ளக்காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.. இந்த விஷயம், சூசைநாதனின் மனைவிக்கு தெரிந்துவிட்டது.. அதனால், கணவருடன் சண்டை போட்டுக் கொண்டு, அம்மா வீட்டுக்கு போய்விட்டார்.. இந்நிலையில், கடந்த மாதம் 18-ம் தேதி ஷாமினி, தன்னுடைய 2 குழந்தைகளுடன் யாருக்கும் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறி விட்டார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் ராஜேஷ், மனைவியை காணோம் என்று மணவாளக்குறிச்சி போலீசில் புகார் தந்தார்.. போலீசாரும் இது குறித்த விசாரணையை நடத்தி, ஷாமினியை தேடி வந்தனர்.

 சர்ச் வாசலில்

சர்ச் வாசலில்

பிறகுதான், நாகர்கோவில் அருகே உள்ள ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் பகுதியில், சொகுசு கார் ஒன்று நிற்பதாகவும், அதன் அருகில் ஒரு ஜோடி தற்கொலை செய்து விழுந்து கிடப்பதாகவும் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தந்தனர்.. ஆரல்வாய்மொழி போலீசாரும் விரைந்து வந்து, சர்ச் வாசலில் விழுந்து இறந்து கிடந்த ஜோடியின் சடலத்தை கைப்பற்றினர்.. அப்போதுதான், காணாமல் போன ஷாமினியும், அவரது கள்ளக்காதலன் சூசைநாதனும் என்பது உறுதியானது.. இவர்கள் இறந்துகிடந்த இடத்துக்கு பக்கத்தில் டாடா சுமோ கார் நின்றுகொண்டிருந்தது..

 டிராவல்ஸ் கார்

டிராவல்ஸ் கார்

அந்த கதவை போலீஸார் திறந்து பார்த்தபோது, ஷாமினியின் இரண்டு குழந்தைகளும் தூங்கிக்கொண்டிருந்தன.. பிறகு காரில் இருந்து குழந்தைகளை போலீஸார் பத்திரமாக மீட்டு விசாரணையை துவக்கினர்.. 2 நாட்களுக்கு பிறகு இதுகுறித்து தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.. சூசைநாதன் டிராவல்ஸ் ஒன்றில் வாடகை கார் ஓட்டி வருபவராம்.. சூசைநாதனுக்கும், அவருடைய மனைவிக்கும் திருமணம் ஆனதில் இருந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது..

 லேசான மனசு

லேசான மனசு

இந்தநிலையில்தான் ஷாமினியை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு சூசைநாதனுக்கு கிடைத்துள்ளது.. அதாவது ஷாமினியின் குழந்தைகளை, சூசைநாதன்தான் ஸ்கூலுக்கு காரில் அழைத்துச் செல்வது வழக்கமாம்.. அப்போதுதான் ஷாமினியுடன், நெருங்கி பழகியதோடு மனம் விட்டு பேசியுள்ளார்... மனைவி டார்ச்சரை எல்லாம் சொல்லி புலம்பி இருக்கிறார்.. இந்த நெருக்கம் அவர்களுக்கிடையே கள்ளக்காதலாக மாறி உள்ளது.. கடைசியில் இவர்களால் பிரிந்து வாழ முடியவில்லை.. நெருக்கம் அதிகமாகி கொண்டே வரவும்தான், சூசைநாதனின் மனைவி கோபித்துக் கொண்டு போய்விட்டார்..

 காரில் ஜோடி

காரில் ஜோடி

இந்த சூழலில்தான், வெளியூருக்கு சென்று நிம்மதியாக வாழலாம் என்று இந்த ஜோடி முடிவு செய்துள்ளது.. ஒரு மாதத்துக்கு முன்பு வீட்டை விட்டு கிளம்பி வந்த நிலையில், காரிலேயே ஊர் ஊராக இவர்கள் சுற்றி வந்துள்ளனர்.. இந்த ஒரு மாதமும், குழந்தைகளும் இந்த ஜோடியுடனேயே காரில் பயணித்து வந்துள்ளனர்.. பல இடங்களுக்கு சென்று இருவரும் சந்தோசமாக இருந்துள்ளனர்... பகலெல்லாம் காரில் சுற்றி திரிந்துவிட்டு, இரவு நேரங்களில் சர்ச் மற்றும் லாட்ஜ்களில் தங்கி வந்திருக்கிறார்கள்.. இதற்கிடையே போலீசார் தங்களை தேடுவதை கேள்விப்பட்டனர்.. குடும்பத்தாரிடம் சிக்கினால் மனம்விரும்பியதுபோல் வாழ முடியாது என்று முடிவு செய்தனர்..கையில் உள்ள பணமும் தீர்ந்து கொண்டே வந்துள்ளது..

 பெட்ஷீட் விரித்து

பெட்ஷீட் விரித்து

பிறகுதான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.. சம்பவத்தன்று தேவசகாயம் மவுண்ட் சர்ச் பகுதிக்கு வந்திருக்கிறார்கள்.. குழந்தைகளை காரிலேயே தூங்கவைத்துவிட்டு, இருவரும் விஷத்தை குடித்துள்ளனர்.. தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் பூச்சிமருந்தை வாங்கி குடித்தார்களாம்.. இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, 2 பேரின் சடலங்களும் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.. இந்த கள்ளக்காதல் ஜோடிக்கு அவரவர் உறவினர்கள் சார்பில் இறுதி சடங்கும் நடந்து முடிந்துள்ளது..

 சர்ச் வாசலில்

சர்ச் வாசலில்

அன்றைய தினம், தன்னுடைய 2 மகன்களுக்கும் சாப்பாடு தந்துவிட்டு, காரில் வசதியாக படுக்க வைத்துள்ளார் ஷாமினி.. 2 பேரும் தூங்கிய பிறகு, அவரும் சூசைநாதனும் அதிகாலை 2 மணிக்கு காரில் இருந்து வெளியே வந்துள்ளனர்... சர்ச் வாசலில், தரையில் போர்வையை விரித்து அதில் உட்கார்ந்த இருவரும் அப்படியே தரையில் சாய்ந்துள்ளனர்.. இது தொடர்பான வீடியோ காட்சிகள் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவிலும் பதிவாகி உள்ளது. இதன்மூலம் அவர்கள் காருக்குள்ளேயே விஷம் சாப்பிட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்... இந்த சூழலில் அம்மா இறந்ததுகூட தெரியாமல் அவரது 2 மகன்களும் காலையில் எழுந்து விளையாடி உள்ளனர்.. அம்மா எங்க.. எப்ப வருவாங்க... என்று கேட்டு காருக்குள்ளேயே அழுது அழுது களைப்பில் தூங்கிவிட்டார்களாம்.. ஒரு பெண் "பாதை" தவறினால், அந்த குடும்பமே சிக்கி சிதறுண்டு போய்விடும் என்பதற்கு ஷாமினியும் ஒரு உதாரணம்..!!

தவிப்பு

தவிப்பு

இவர்கள் குறித்து இன்னொன்றையும் சொல்கிறார்கள்.. ஷாமினியின் கணவர் ராஜேஷ் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராம்.. அவர் வெளிநாட்டில் இருந்ததால்தான், இவர்கள் இங்கே இஷ்டத்துக்கும் ஜாலியாக இருந்திருக்க முடிந்திருக்கிறது.. சமீபத்தில்தான் வெளிநாட்டில் இருந்து ராஜேஷ் ஊர் திரும்பினாராம்.. இதுதான் மிகப்பெரிய இடைஞ்சலாக இருந்துள்ளது.. கள்ளக்காதலை தொடர முடியாது என்பதால்தான் பயம் அதிகரித்து, தற்கொலை வரை சென்றதாக சொல்கிறார்கள்.. இவர்களின் உடல்களை வாங்க ஷாமினியின் கணவர் ராஜேஷ் மற்றும் உறவினர்கள் வந்திருந்தனர்... ஆனால் சூசைநாதன் தரப்பில் யாரும் வந்து சடலத்தை வாங்கவில்லையாம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+