வேட்பாளரை கூட சரியா பார்த்து நிறுத்த தெரியாத விஜய்! வழக்கு, சர்ச்சைகளில் சிக்கியவர்களுக்கு சீட்
சென்னை: தவெக வேட்பாளர்கள் பட்டியலில் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு அளித்த முக்கியத்துவத்தை விட மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், குற்ற வழக்குகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கியவர்களை வேட்பாளர்களை விஜய் நிறுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கலும் தொடங்கியுள்ளது. அரசியல் களத்தில் முதல் முறையாக எண்ட்ரி கொடுத்துள்ள நடிகர் விஜய்யின் தவெக இந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளர்களை இறக்கியுள்ளது.

கஞ்சா வழக்கில் கைதானவர்
தவெக வேட்பாளர்கள் பட்டியலில் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு அளித்த முக்கியத்துவத்தை விட மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தநிலையில், குற்ற வழக்குகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கியவர்களை வேட்பாளர்களை விஜய் நிறுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
பெருவூராணி தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள டி சந்திர காண்டீபன் முன்னாள் பாஜக நிர்வாகி ஆவார். பாஜகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த இவருக்கு போட்டியிடும் வாய்ப்பை விஜய் கொடுத்துள்ளார். கஞ்சா வழக்கில் கைதாகி ஜாமீனில் இருக்கும் சந்திர காண்டீபனுக்கு சீட் வழங்கப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சாதிபெருமை பேசுபவருக்கு வாய்ப்பு
அதேபோல, கம்பம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் பி.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா தன்னை குறிப்பிட்ட சாதிக்காரன் என்று பேசி பெருமைப்பட்டுக்கொள்ளும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. பெரியாரை கொள்கை தலைவராக நிறுத்தியுள்ள தவெகவில் சாதிபெருமை பேசுபவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதா? என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கொலை மிரட்டல் விடும் மரிய செல்வன்
சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிடுபவர் மரிய செல்வன். இவர் தமிழகத்தில் பிரபலமாக இருக்க கூடிய ஜேப்பியர் கல்வி குழுமங்களின் நிறுவனரான ஜேப்பியாரின் மருமகன் ஆவார். இவர் சிலரை தாக்க முயற்சிப்பது போன்றும், கொலை மிரட்டல் விடுப்பது போன்றதுமான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன. ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடும் வி பாண்டியை, தரக்குறைவான வார்த்தைகளால் பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
தவெக வேட்பாளர் மீது பாலியல் வழக்கு
கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் ஆர்டி கனிமொழி புற்றுநோய்க்கு ஜோதிட ரீதியான தீர்வு இருப்பதாகவும், விஜய்யால் முதல்வர் ஆக முடியாது என்றும் பேசிய பழைய வீடியோக்கள் உலா வரத்தொடங்கியுள்ளன. சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிடும் எஸ்.லட்சுமணன் மீது நில அபகரிப்பு வழக்கு உள்பட பிற கிரிமனல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தின் பூந்தமல்லி தொகுதி வேட்பாளரான பிரகாசம் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுவர் எஸ்பி அலுவலகத்தில் தவெக மகளிர் அணியை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்த நிலையில் தவெக வேட்பாளர் பிரகாசம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனித்து விடப்பட்ட விஜய்
தன்னுடன் கூட்டணி வைத்தால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று கூவி கூவி அழைத்தும் எந்தஒரு அரசியல் கட்சியும் விஜய் பக்கமே திரும்பி பார்க்காத நிலையில், தனித்து போட்டியிட வேண்டிய கட்டாயத்திற்கு விஜய் தள்ளப்பட்டுள்ளார். இதனால் 234 தொகுதிகளுக்கும் ஒருவழியாக வேட்பாளர்களை விஜய் கட்சி நிறுத்தியிருந்தாலும் வேட்பாளர்கள் மீது எழுந்து வரும் அடுத்தடுத்து புகார்கள் விஜய்க்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications