இயற்கை பேரிடர்.. பெருமழையால் பயிர் சேதம்.. விரைவில் நிவாரணம்.. வேளாண் அமைச்சர் உறுதி
சென்னை: தென் மாவட்ட பெருமழையால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று வேளாண்மைத்துறை அமைச்சர் எம்ஆர்.கே பன்னீர் செல்வம் கூறியுள்ளார். இயற்கை பேரிடர் காரணமாக ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு ரூ. 380.40 கோடி நிவாரணமாக 4.5 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது என்றும் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் 4வது முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. 2024-25ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை சட்டசபையில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், தமிழ்ச் சமூகம் உழவர்களை உச்சத்தில் வைத்துள்ளதால் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் வேளாண் நிதிநிலை அறிக்கை உழவர்களின் வாழ்க்கையை உயரத்திற்கு அழைத்துச் செல்லும்; விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் பட்ஜெட் .

மண்வளத்தை பேணிக் காக்கவும், மக்கள் நலன் காக்கும் விதமான உயிர் வேளாண்மை போன்ற அனைத்து செய்முறைகளையும் ஊக்கப்படுத்த 'முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்' என்ற புதிய திட்டம் ரூ.206 கோடி நிதியில் செயல்படுத்தப்படும்.
2022-23ம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 116 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்படாமல் இருந்த பாசன மின் இணைப்பிற்கான விண்ணப்பங்களில், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1.50 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் நடப்பாண்டிலும் 50,000 மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க, வேளாண் பொருட்களை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்கிறது. இயற்கை பேரிடர் காரணமாக ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு ரூ. 380.40 கோடி நிவாரணமாக 4.5 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. விளைபொருட்களில் அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பை தடுக்க ஏதுவாக கிடங்குகள் அமைக்கப்படும் என்று கூறினார்.
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1.5 லட்சம் பாசன மின் இணைப்புகள் வழங்கப்பட்டது என்றும் அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications