கோடி கோடியாக செலவு..ஒட்டகத்தின் மீதேறி ஓட்டு கேட்கும் கோமாளிகள்..ஜெயக்குமார் தாக்கு
ஈரோடு கிழக்குத் தொகுதியில் 35 கோடியே 65 லட்சம் ரூபாய் காங்கிரஸ் வேட்பாளருக்கு திமுக செலவுசெய்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை: ஒட்டகத்தின் மீதேறி வந்து கோமாளிகள் போல வாக்கு கேட்பவர்களையும் வடை சுட்டும் புரோட்டா போட்டு கொடுத்தும் வாக்கு கேட்பவர்களை ஈரோடு கிழக்குத் தொகுதி மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் வாக்கு சேகரிக்க வரும் போது அதற்கு யாரும் போகக் கூடாது என்று தடுக்கும் வகையில் ஆளுங்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு மீன், கறி, சிக்கன், காய்கறிகள், மளிகை சாமான்களை வீடு வீடாக கொடுத்து அடைத்து வைத்திருக்கின்றனர்.
சாமியானா பந்தல் போட்டு வாக்காளர்களை அடைத்து வைத்துக்கொண்டு பணம் செலவு செய்கின்றனர். இதுவரை 35 கோடி ரூபாய்க்கு மேல் ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு செலவு செய்துள்ளனர்.

ஆளுங்கட்சியினர் குறிப்பாக முதல்வர் மற்றும் அவரது மகன்உதயநிதி தவிர மற்ற அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் அனைவரும் ஈரோட்டில் முகாமிட்டுள்ளனர். தேர்தலை முறைகேடாக சந்திக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளனர். என்னதான் ஒட்டகத்தின் மீதேறி வந்தாலும் வடை சுட்டாலும் புரோட்டா போட்டு கொடுத்தாலும் மக்கள் நம்ப மாட்டார்கள் பணம், அதிகார பலத்தை கொண்டுவெற்றி பெற முயற்சித்து வருகின்றனர். இவற்றை தாண்டி இரட்டை இலை சின்னம் மகத்தான வெற்றி பெறும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
ஈரோடு கிழக்கில் அதிகார துஷ்பிரயோகம், பண விநியோகம்குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications