மின்சார வாரியம் AutoPay அறிவிப்பில் ட்விஸ்ட்டை பாருங்க.. 500 யூனிட்டுக்கு மேல் போனால் அந்த சலுகை கட்
சென்னை: தமிழகத்தில் மின் கட்டணம் தாமதமானால் இணைப்பு துண்டிப்பு, அபராதம், மீண்டும் இணைப்பு கட்டணம் என்று நிறைய தொல்லைகள் இருந்து வருகின்றன.. இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் TNPDCL பெடரல் வங்கியுடன் இணைந்து NACH தளம் மூலம் தானியங்கி பற்று வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது... இது உங்கள் மின் கட்டணத்தை எப்படி மாற்றும் என்பதை இங்கே பார்க்கலாம்..
தமிழ்நாடு மின்சார வினியோக நிறுவனம் (TNPDCL), பெடரல் வங்கியுடன் இணைந்து National Automated Clearing House (NACH) தளம் மூலம் TNPDCL autopay வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.. NACH என்பது வங்கிகளுக்கிடையிலான தானியங்கி பரிவர்த்தனை தளம் ஆகும்.. வீட்டு உபயோக, வணிகம் மற்றும் பிற குறைந்த அழுத்த மின்சார நுகர்வோர் அனைவரும் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள்..

இந்த TNPDCL autopay வசதி ஒருமுறை பதிவு செய்துவிட்டால், மதிப்பீட்டு தேதியிலிருந்து 10-வது நாளில் நுகர்வோரின் வங்கிக்கணக்கில் இருந்து மின் கட்டணம் தானாகவே பற்று வைக்கப்படும்.. உடனே ஒரு மின்னணு ரசீதும் உருவாக்கப்பட்டு வழங்கப்படும்..
பதிவு செய்வது எப்படி?
TNPDCL autopay திட்டத்தில் பதிவு செய்ய, TNPDCL இணையதளத்தில் சென்று வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.. TNPDCL autopay மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி தேவையில்லை என்று தோன்றினால், திட்டத்தை ரத்து செய்வதற்கான விருப்பமும் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது..
வங்கிக்கணக்கில் போதிய நிதி இல்லாத காரணத்தால் கட்டணம் பற்று வைக்கப்படாவிட்டால், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் நுகர்வோருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும்.. அதற்கு பிறகு மாற்று வழிகள் மூலம் கட்டணம் செலுத்த வாய்ப்பு வழங்கப்படும்..
TNPDCL autopay திட்டம்
தமிழகத்தில் சுமார் 85 சதவீத நுகர்வோர் நெட்பேங்கிங், கிரெடிட்-டெபிட் கார்டுகள், UPI உள்ளிட்ட ஆன்லைன் வழிகளில் மின் கட்டணம் செலுத்துகிறார்கள்.. இந்த நிலையில் TNPDCL autopay திட்டம் அமலுக்கு வந்தால், தாமதமாக கட்டணம் செலுத்துவதை தவிர்க்கலாம் என்பதோடு, TNPDCL-க்கு வருவாய் வசூலும் சீராக இருக்கும்
இந்த autopay வசதியோடு சேர்த்து கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான தகவல் என்னவெனில், தமிழக அரசின் 200 யூனிட் இலவச மின்சார திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது.. இரு மாதங்களுக்கான பயன்பாடு 500 யூனிட்டுக்குள் இருந்தால் 200 யூனிட் வரை இலவசம்.. இதனால் 2.23 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ.235 மிச்சமாகும்.. 500 யூனிட்டுக்கு அதிகமாக பயன்படுத்தும் நுகர்வோருக்கு இப்போது நடைமுறையில் உள்ள 100 யூனிட் இலவச சலுகை தொடர்ந்து வழங்கப்படும்..
200 யூனிட் இலவச திட்டம்
மின்கட்டண தாமதத்தை குறைத்து, ஆன்லைன் கட்டண முறையை முழுமையாக தானியக்கப்படுத்தும் முயற்சியாக இந்த TNPDCL autopay திட்டம் பார்க்கப்படுகிறது.. இது நுகர்வோருக்கும் மின் வாரியத்துக்கும் ஒரேநேரத்தில் பயனளிக்கும் திட்டமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
தற்போது தமிழகத்தில் சுமார் 85 சதவீதத்திற்கும் அதிகமான நுகர்வோர் நெட்பேங்கிங், கிரெடிட், டெபிட் கார்டுகள் மற்றும் UPI போன்ற ஆன்லைன் தளங்கள் மூலமாகவே மின் கட்டணம் செலுத்தி வருகிறார்கள்.. இந்த சூழ்நிலையில், TNPDCL autopay வசதி அறிமுகமாகியிருப்பது நுகர்வோரின் வேலைப்பளுவை குறைப்பதோடு, மின்சார வாரியத்தின் வருவாயை எந்தவிதமான தாமதமும் இல்லாமல் சரியான நேரத்தில் மீட்டெடுக்க பெரிதும் உதவும் என்று அதிகாரிகள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது..!!












Click it and Unblock the Notifications