இது தொடர வேண்டும், தீவிரவாதிகளை அழியுங்கள்.. சுப்பிரமணி, சிவச்சந்திரன் மனைவியர் ஆவேசம்
தீவிரவாதத்தை வேறோடு ஒழியுங்கள் என்று சுப்பிரமணி மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video

சென்னை: "தீவிரவாதிகளை வேரோடு அழியுங்கள்" என்று தமிழக வீரர்கள் சிவசந்திரன், சுப்பிரமணியின் மனைவிகளான இளம் விதவைகள் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளனர்.
புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட 40-க்கும் மேற்பட்டோரில் 2 தமிழக வீரர்களும் அடக்கம். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணி, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சிவசந்திரன். இருவருக்கும் சின்ன வயசு. இருவருமே திருமணம் ஆனவர்கள்.
இதில், சுப்பிரமணிக்கு குழந்தை இல்லை. கல்யாணம் ஆகி ஒன்றரை வருடம்தான் ஆகிறது. சிவசந்திரனுக்கு 2 வயதில் குழந்தை உள்ள நிலையில் மனைவி கர்ப்பமாக இருக்கிறார். இதனால் கணவன் இறந்ததை கூட கர்ப்பிணி பெண்ணிடம் சொல்ல முடியாத துயரம் ஏற்பட்டது.

மனைவிகள்
இரு வீரர்களின் மரணத்தால் அவர்களின் கிராமமே அழுதது. இன்று பயங்கரவாதிகளின் மீதான விமான படை தாக்குதலை இந்தியா கையாண்டது. 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனை இரு வீரர்களின் மனைவிகளும் பாராட்டி உள்ளனர்.

இடியாக விழுந்த செய்தி
கணவரின் மரணத்திலிருந்து இருவராலும் இன்னும் மீள முடியவில்லை, ஏனென்றால், இவர்கள் இருவருமே கடைசியாக தாக்குதலுக்கு முன்பு மனைவிமார்களிடம்தான் பேசியிருக்கிறார்கள். ஸ்ரீநகருக்கு போகிறோம் என்று போனில் தகவலை சொல்லிவிட்டுதான் கிளம்பி சென்றிருக்கிறார்கள். இதற்கு பிறகுதான் அந்த செய்தி இடியாக வந்துவிழுந்தது.

பேட்டி
இப்போது, விமானப்படை தாக்குதலை வரவேற்பதாக சுப்பிரமணியன் மனைவி கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர வேண்டும் என்றும் தீவிரவாதம் ஒழிய வேண்டும் என்றும் விடுத்திருக்கிறார்.

அழியுங்கள்
இதேபோல சிவசந்திரன் மனைவி, விமானப்படை தாக்குதல்குறித்து சொல்லும்போது, தீவிரவாதிகளை வேரோடு அழியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications