ஏமாந்த எம்எஸ் தோனி.. கோடிக்கணக்கான ரூபாயை இழக்கும் அபாயத்தில் சிஎஸ்கே கேப்டன்.. என்ன நடந்தது?
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் எம்எஸ் தோனி பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறது. புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சென்னை அணியை பிளேஆஃப் சுற்றுக்குள் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு எம்எஸ் தோனிக்கு உள்ளது. இந்த பிரஷருக்கு நடுவே தான் எம்எஸ் தோனிக்கு கோடிக்கணக்கான ரூபாயை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது விறுவிறுப்பாக ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. சென்னை அணிக்கு மீண்டும் எம்எஸ் தோனி கேப்டனாகி உள்ளார். தற்போது புள்ளி பட்டியலில் சென்னை அணி கடைசி இடமான 10 வது இடத்தில் உள்ளது. இருப்பினும் வரும் போட்டிகளில் சென்னை சிறப்பாக செயல்பட்டு பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இன்றைய தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி 2 அணிகளுக்கும் முக்கியம். இதனால் இரு அணிகளும் வெற்றி பெற போராடும் என்பதால் ஆட்டத்தில் சுவாரசியத்துக்கு பஞ்சமிருக்காது.
இப்படியான சூழலில் தற்போது எம்எஸ் தோனி கோடிக்கணக்கான ரூபாயை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதாவது BluSmart என்ற கிரீன் மொபிலிட்டி ஸ்டார்ட்அப் நிறுவனம் எலக்ட்ரிக் கார்கள் மூலம் முக்கிய நகரங்களில் வாடகை கார் சேவையை வழங்கியது டெல்லி என்சிஆர், மும்பை, பெங்களூர் உள்ளிட்ட பல நகரங்களில் வாடகை கார் சேவையை வழங்கியது.
இந்த நிறுவனம் குறுகிய காலத்தில் புகழ்பெற்றது. இந்த கிரீன் மொபிலிட்டி ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீட்டாளர்கள் ரூ.4,100 கோடி வரை முதலீடு செய்தனர். இதில் எம்எஸ் தோனி கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்திருந்தார். அதேபோல் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், தொழிலதிபர் சஞ்சீவ் பஜான் உள்பட பலரும் முதலீடு செய்தனர்.
இந்நிலையில் தான் தற்போது அந்த நிறுவனம் சமீபத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 17 ம் தேதி முதல் ப்ளூஸ்மார்ட் செயலி மூலம் புக்கிங் செய்யும் வசதி தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது புக்கிங் வசதி நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் எம்எஸ் தோனி தனது முதலீட்டு பணத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதற்கு முக்கிய காரணம் ப்ளூஸ்மார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர்களான அன்மோல் சிங், ஜக்கி மற்றும் புனித் சிங் ஜக்கி ஆகியோர் நிறுவனத்தின் பெயரில் வாங்கிய கடனில் ரூ.260 கோடியை தவறாக செலவழித்துள்ளனர். தொழிலுக்காக வாங்கிய பணத்தை வைத்து ஆடம்பர கார், சொகுசு வீடு, கோல்ப் உபகணரணங்கள் வாங்கி உள்ளதோடு வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளனர்.
இதனால் அந்த நிறுவனம் நஷ்டத்தை சந்திக்க தொடங்கிய நிலையில் தற்போது சேவையை நிறுத்தி உள்ளது. நஷ்டம் காரணமாக மூடும் நிலைக்கு அந்த நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது. இதுபற்றி ‛செபி' கண்காணித்து வரும் நிலையில் நிலைமை சரியாக காலம் பிடிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் ப்ளூ ஸ்மார்ட் கிரீன் மொபிலிட்டி ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்த எம்எஸ் தோனி, தீபிகா படுகோனே உள்பட பல பிரலங்கள் பணத்தை இழக்கும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications