சமயபுரத்து மாரியாத்தா.. நீ யாருனு காட்டாத்தா.. சிஎஸ்கே ரசிகருக்கு அருளே வந்துடுச்சு.. வீடியோவை பாருங்க
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர் ஒருவர் டிவியில் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தார். ஐந்தாவது பாலில் ஜடேஜா சிக்சர் அடித்த உடன் உற்சாகமடைந்த அவர், திடீரென டிவி முன்பு சென்று தாயே ஓம் சக்தி, இந்த ஒரு பால்ல ஜெயிக்கனும்மா.. என்று உருக்கமாக வேண்டிக்கொண்டார். ஜெயித்த உடன் உணர்ச்சி பெருக்கில் அவர் கத்தினார். இந்த மீம்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தோனியும் தமிழ்நாட்டு ரசிகர்களின் அன்பை மறக்கவே முடியாது. சென்னை அணி சொந்த மண்ணில் அபாரமாக வெல்ல, ரசிகர்கள் கொடுக்கும் உற்சாகமும் முக்கியமான காரணம். அவர்களின் பிரார்த்தனையும், நம்பிக்கையும், நேற்று மெய்சிலிர்க்க வைத்தது.

அஹமதாபாத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து கொண்டே இருந்த காரணத்தால் போட்டி நடைபெறுமா, ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஒரு வேளை போட்டி ரத்து செய்யப்பட்டால் குஜராத் அணிக்கு தான் கோப்பையை தருவார்கள் என்ற நிலை இருந்தது.
இந்நிலையில் நேற்று ஐபிஎல் இறுதி போட்டி நடந்தது.இதை காண சென்னை ரசிகர்கள் பலர் ரயில்களில் சென்று இருந்தனர். ரயில் நிலையங்களில் பேருந்து நிலையங்களில் இரவுகளை கழித்து காத்திருந்து போட்டியை பார்த்தனர். மஞ்சள் படையினர் எண்ணிக்கை அஹமதாபாத்திலும் அதிகமாகவே இருந்தது

நேற்று இரவு நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கனவை மொகித் சர்மா தடுக்க பார்த்தார். அடுத்தடுத்த ஓவர்களை அபாரமாக வீசி சென்னை அணி ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்தினார். ஒரே ஓவரில் ராயுடு, தோனியை அடுத்தடுத்து அவுட் ஆக்கினார். மொகித் சர்மா அபாரமாக பந்து வீசி அதிர வைத்தார்
உண்மையை சொல்வதென்றால் சாவு பயத்தையே மொகித் சர்மா காட்டிவிட்டார். கடைசி ஓவரின் முதல் 4 பந்துகளை அடிக்க முடியாத அளவிற்கு ஸ்லோ பால்களாகவும், யார்க்கர்களாவும் வீசினார். முதல் நான்கு பாலுமே யார்க்கர் என்பதால் அடிக்க முடியாமல் திணறினார்கள் துபேவும், ஜடேஜாவும்.. இதனால் கடைசி இரண்டு பந்தில் 10 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு சென்னை அணி தள்ளப்பட்டது. ஐந்தாவது பந்தில் பவுண்டரி போனால் கூட சென்னை அணிக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்படும் என்ற நிலை இருந்தது.
இந்நிலையில் மொகித் சர்மா வீசிய யார்க்கர் ஜஸ்ட் மிஸ்ஸானது. இதை சரியாக பயன்படுத்திய ஜடேஜா சிக்சரை பறக்கவிட்டார். இதனால் கடைசி பந்தில் நான்கு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. இரு அணி வீரர்களுக்கும், இரு அணி ரசிகர்களுக்கும் பதற்றம் தொற்றிக்கொண்டது. கண்ணீருடன் பிரார்த்தனை எல்லாம் ரசிகர்கள் செய்தார்கள்.

தமிழ்நாட்டில் இதை டிவியில் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர் ஒருவர், ஐந்தாவது பாலில் ஜடேஜா சிக்சர் அடித்த உடன் உற்சாகம் அடைந்தார். திடீரென டிவி முன்பு சென்று தாயே ஓம் சக்தி, இந்த ஒரு பால்ல ஜெயிக்கனும்மா.. என்று உருக்கமாக வேண்டிக்கொண்டார். அப்போது மொகித் சர்மா பந்தை லெக்கில் போட அதை அப்படியே பின்னாடி அடித்துவிட்டார் ஜடேஜா, இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.
ஆத்தா உன் மகிமையே மகிமை 🙏🙏🙏 pic.twitter.com/RSpTS4oxOS
— டான் (@krajesh4u) May 30, 2023
இதை பார்த்த அந்த சென்னை ரசிகர், உற்சாக மிகுதியில் கத்தி கூச்சலிட்டார். சாமிக்கு அருள் வந்தது போல் செய்து கத்தினார். அவரை சமாதானம் செய்யவே ஒருவர் ஓடிவந்தார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications