அந்த 13 பந்துகள்.. 2 வருட விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த "பீஸ்ட்" தோனி.. எப்படி சாத்தியமானது?
சென்னை: கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் அரை சதம் அடித்ததன் மூலம் சிஎஸ்கே வீரர் தோனி 2 வருட விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கொல்கத்தா சென்னை இடையிலான ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதலில் இறங்கிய சிஎஸ்கே அணியின் பேட்டிங் சொதப்பிய காரணத்தால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு வெறியும் 131 ரன்கள் மட்டுமே எடுத்தது.
கொல்கத்தா அணியின் பவுலிங், பீல்டிங் செட்டப், ஓவர் ரொட்டேஷன் எல்லாமே சிறப்பாக இருந்தது. இதையடுத்து இறங்கிய கொல்கத்தா அணி தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடி வெற்றி இலக்கை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இன்றைய போட்டியில் தோனியின் ஆட்டம் சிறப்பாக இருந்தது.

தோனி
இன்றைய போட்டியில் தோனி களமிறங்கியதே மிகவும் இக்கட்டான சூழ்நிலையில்தான். ஷிவம் துபே வெறும் 3 ரன்கள் எடுத்து அவுட்டான நிலையில் சிஎஸ்கே அணி 10.5 ஓவரில் 61-5 ரன்கள் எடுத்து திணறிக்கொண்டு இருந்தது. எதிர்பக்கம் ஜடேஜா சரியாக ஆட முடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்தார். அவரின் பேட்டில் சரியாக பந்து மாட்டாத நிலையில் ஷாட் அடிக்க முடியாமல் கடுமையாக கஷ்டப்பட்டார்.

ஜடேஜா பேட்டிங்
கடந்த இரண்டு சீசன் ஜடேஜா சிறப்பாக ஆடினார். ஆனாலும் இன்று கேப்டன் என்றதும் அவரின் பேட்டிங் கொஞ்சம் சொதப்பியது. அவர் பேட்டிங் இறங்கிய நொடியில் இருந்தே திணறடியபடி இருந்தார். இன்னொரு பக்கம் தோனியும் ஸ்பின் பவுலிங்கில் ஆட முடியாமல் திணறியது போல இருந்தார். எப்போதும் போல வருண் சக்ரவர்த்தி பந்துகளை அடிக்க முடியாமல் கஷ்டப்படுவது போல இருந்தது. அதோடு நரேன் பந்துகளையும் எங்கே இப்போ அவுட் ஆவரோ.. அப்போ அவுட் ஆவரோ என்று பதற்றம் தந்து கொண்டே இருந்தார்.

ஸ்பின் பவுலிங்
முதல் 25 பந்துகளை பிடித்த தோனி வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். சரி இந்த முறையும் அவ்வளவுதான்.. இந்த சீஸனும் தோனி டெஸ்ட் இன்னிங்ஸ் ஆட போகிறார் என்றே பலரும் நினைத்தனர். ஆனால் கடைசி 13 பந்துகள் தோனி ஆடியது ருத்ர தாண்டவம். சாதாரண மோடில் இருந்து பீஸ்ட் மோடிற்கு மாறி வான்கடே மைதானத்தில் அரபிக்குத்து போட்டார் தல தோனி.

கொல்கத்தா சிஎஸ்கே
கடைசி 13 பந்துகளில் மட்டும் இவர் 35 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு சிக்ஸ் அடக்கம். கடைசி இரண்டு வருடமாக தோனி முதல் தர போட்டிகளில் ஆடவில்லை. வேறு எந்த லீக் போட்டியும் ஆடவில்லை. ஐபிஎல் போட்டிக்கும் கூட 10 நாட்களுக்கு முன்பே பயிற்சி எடுக்க தொடங்கினார். ஆனால் இன்று தோனி சிறப்பாக ஆடி இந்த சீஸனின் முதல் அரை சதத்தை பதிவு செய்தார். இந்த போட்டியில் தோனி முதலில் ஸ்பின் பவுலிங் திணறினார் என்று கூறுவதை விட டிபன்ஸ் ஆடினார் என்றுதான் கூற வேண்டும்.

பாடம் கற்றார்
கடந்த சீசன்களில் தோனி ஸ்பிரிங் பவுலிங்கை அடிக்க முயன்றுதான் விக்கெட்டை பறிகொடுத்தார். அதிலும் வருண் பவுலிங்கை சுற்ற முயன்று தேவையின்றி அவுட் ஆனார். ஆனால் இந்த முறை அப்படி ஆடாமல் நிதானமாக டிபன்ஸ் ஆடி கடைசியில் பாஸ்ட் பவுலர்கள் ஓவரை பிரித்து எடுத்தார். தோனியின் இந்த பிளானிங்தான் இன்று அவருக்கு கை கொடுத்தது. தோனி இந்த சீசனில் சரியாக ஆட மாட்டார். அவர் இப்போது கேப்டனும் இல்லை என்று விமர்சனங்கள் முன்பு வைக்கப்பட்டன.

கேப்டன் இல்லை
கேப்டனும் இல்லை என்பதால் அவரை ஏன் அணியில் வைத்திருக்க வேண்டும் என்றும் கூட விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்தன. ஆனால் அந்த விமர்சனங்களை எல்லாம் இல்லாமலாக்கி தோனி இன்று தன்னை சுத்தமான பேட்ஸ்மேன் என்றும் நிரூபித்து உள்ளார். கேப்டன்சி இல்லாத காரணத்தால் டென்சன் இன்றி ஆடினார். 2 வருடமாக தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு, கேப்டன் அல்லாத முதல் போட்டியிலேயே சரவெடி பதில் கொடுத்துள்ளார் தோனி.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications