தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பலா மரம்.. இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.. ஏன் தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டை சேர்ந்த பலா மரம் ஒன்று தேசிய அளவில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் பலர் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் தெலுங்கானாவில் இருக்கும் ஆலமரம் ஒன்று தேசிய அளவில் கவனம் பெற்றது. இந்த மரத்தை பற்றிய ஆச்சர்ய தகவல்கள் வெளியாகி உள்ளன.
தெலுங்கானாவில் உள்ள மகபூப் நகரம் என்ற மாவட்டத்தில்தான் அந்த மரம் இருக்கிறது. இந்த ஆலமரம் 100 வருடம் 200 வருடம் பழமை வாய்ந்தது கிடையாது.
இது மொத்தம் 8000 வருடம் பழமை வாய்ந்த மரம் ஆகும். ஆசியாவில் இருக்கும் மிகப்பெரிய ஆலமரங்களில் ஒன்று ஆகும்

தமிழ்நாடு மரம்
இந்த நிலையில்தான் தற்போது தமிழ்நாட்டில் உள்ள மரம் ஒன்றும் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. அது பலா மரம் ஆகும். கடலூர் மாவட்டத்தில் இந்த பலா மரம் உள்ளது. ட்விட்டர் வலைத்தளத்தில் அபர்ணா கார்த்திகேயன் என்ற நபர் இந்த வீடியோவை பகிர்ந்து உள்ளார். முழுக்க முழுக்க பலா பழங்களுடன் பார்க்கவே அதிசயமாக இந்த மரம் உள்ளது.

ஏன் டிரெண்டிங்?
இந்த மரம் கவனம் பெற காரணமே அதன் வயதுதான். அந்த மரத்திற்கு 200 வருடம் வயது ஆகிறது. 200 வருடம் ஆன போதிலும் இந்த மரத்தில் இப்போதும் பலா பழங்கள் காய்த்து தொங்கி கொண்டு இருக்கிறது. பலா மரங்கள் பொதுவாகவே காலம் செல்ல செல்ல பெரிதாகும். இந்த மரம் இன்னும் பெரிதாக ராட்சச தோற்றம் கொண்டுள்ளது.

எப்படி இருக்கிறது?
இதன் தண்டு மிகப்பெரிதாக வளர்ந்து.. ராட்சச தோற்றத்துடன் காணப்படுகிறது. இந்த மரத்தை சுற்றி பார்க்க மொத்தம் 25 வினாடிகள் ஆகும் என்று கீழே நெட்டிசன்கள் பலர் கமெண்ட் செய்துள்ளனர். ஆயிரம்காட்சி என்று இந்த மரத்திற்கு பெயர் வைக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதி மக்கள் இந்த மரத்தை கடவுளாகவும், அதிசயமாகவும் பார்த்து வருகின்றனர்.

எத்தனை பலா
இதில் இப்போதும் 100க்கும் மேற்பட்ட பலா பழங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. 200 வருடம் கழித்தும் அந்த மரம் தொடர்ந்து பழங்களை கொடுப்பது பலருக்கும் வியப்பை கொடுத்து உள்ளது. இதன் பலா பழங்களை வாங்க பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வருவதாக கூறப்படுகிறது. 200 வருட பழமையான இந்த மரத்தை வடஇந்திய நெட்டிசன்கள் பலர் இணையத்தில் பாராட்டி வருகின்றனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications