இலங்கை சிறையில் ஒரு தமிழக மீனவர் கூட இல்லை.. சென்னையில் பிரதமர் மோடி
சென்னை: இலங்கை சிறையில் ஒரு தமிழக மீனவர் கூட இல்லை... அனைவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தது மத்திய அரசு என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
சென்னையில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும் அடிக்கல் நாட்டியும் பிரதமர் மோடி பேசியதாவது:

தமிழக மீனவர்கள் நீண்டகாலமாக பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த பிரச்சனையின் வரலாற்றுக்குள் நான் செல்லவில்லை.
இலங்கை அரசால் மீனவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கைகளை உடனே மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பாஜக ஆட்சி காலத்தில் 1,600 மீனவர்கள் இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 313 மீன்பிடி படகுகளும் இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய மீன்பிடி படகுகளையும் இலங்கை அரசு விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது மத்திய அரசு.
தற்போதைய நிலையில் இலங்கை சிறையில் ஒரு தமிழக மீனவர் கூட இல்லை. மீனவர்களின் உரிமையை மத்திய அரசு பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications