உஷார் மக்களே.. இனி போன்ல 'ஹலோ' சொல்லாதீங்க! எச்சரிக்கும் சைபர் கிரைம் நிபுணர்கள்
சென்னை: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் பல வகையில் மனிதர்களுக்கு உதவியாக இருந்து வரும் நிலையில், சைபர் கிரைம் மோசடிகளும் இதன் மூலம் அதிகரிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக உங்களுடைய வாய்ஸை உங்களுக்கே தெரியாமல் குளோனிங் செய்யும் தொழில்நுட்பம் மூலம் நடக்கும் மோசடிகள் அதிகரித்துள்ளன.
சில நாட்களுக்கு முன்னர் ஹைதராபாத்தில், 72 வயதான பாட்டி ஒருவருக்கு, நியூஜெர்சியில் உள்ள அவரது நாத்தனாரிடம் இருந்து பணம் கேட்டு வாட்ஸ்அப் வழியாக மெசேஜ் வந்திருக்கிறது. ஆனால், இந்த நம்பர் புதியதாக இருக்கவே, பாட்டிக்கு லைட்டாக சந்தேகம் இருந்திருக்கிறது. எனவே பாட்டி நாத்தனாருக்கு போன் அடித்திருக்கிறார். போனில், நாத்தனார் குரல் கேட்கவே, பாட்டியும் நம்பி ரூ.1.97 லட்சத்தை அனுப்பியிருக்கிறார். பணம் போன அடுத்த விநாடியே, அந்த நம்பர், பாட்டியை பிளாக் செய்திருக்கிறது.

பாட்டிக்கு எதுவும் விளங்கவில்லை. எனவே நியூஜெர்சியில் உள்ள மற்றொரு உறவினருக்கு போன் போட்டு கேட்டுள்ளார். அப்போதுதான் உண்மை தெரிந்திருக்கிறது. அதாவது பாட்டி ஏமாந்து போயிருக்கிறார். பணம் கேட்டது அவரது நாத்தனார் கிடையாது. சரி எப்படி குரல் மட்டும் சரியாக இருந்தது? என்று சந்தேகம் எழுந்தது. எனவே ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். அவர்கள், இந்த மோசடி குறித்து விளக்கியுள்ளனர்.
முதலில் அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து போன் கால் வரும். நீங்கள் எடுத்து ஹலோ சொன்னவுடன் அவர்கள் கட் செய்துவிடுவார்கள். ஆனால் உங்கள் வாய்ஸ் ரெக்கார்ட் செய்யப்பட்டிருக்கும். அதை வைத்து ஏஐ தொழில்நுட்பத்தில் குளோனிங் முறையில் உங்கள் வாய்ஸ் உருவாக்கப்படும். அதை வைத்து உங்கள் உறவினர்களை, நீங்கள் பேசுவதாக காட்டி ஏமாற்றிவிடுவார்கள். நிஜமான வாய்ஸ்க்கும், ஏஐ வாய்ஸ்க்கும் அடையாளம் காண்பது சிரமமாக இருக்கும் என்று போலீசார் கூறியுள்ளனர்.
இத்தகைய மோசடிகள் வேகமாக அதிகரித்து வருவதாகக் காவல்துறை எச்சரித்துள்ளது. பணம் கேட்டு தெரிந்தவர்கள் மெசேஜ் செய்தால், வீடியோ கால் செய்து ஆளை உறுதி செய்த பின்னர் பணம் அனுப்ப வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு குரல் மோசடிகளுக்கு ஆளானவர்களில் 83 சதவிகிதத்தினர் பண இழப்புகளைச் சந்தித்துள்ளனர். இவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர், அதாவது 48 சதவிகிதத்தினர் ₹50,000-க்கும் அதிகமாக இழந்துள்ளனர். இந்தியர்களில் 69 சதவிகிதத்தினர், மனிதக் குரலுக்கும் செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் குரலுக்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்டறிவதில் தடுமாறுகின்றனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனவே அடுத்த முறை, உங்களுக்கு தெரியாத எண்ணிலிருந்து போன் கால் வருகிறது எனில் முதலில் ஹலோ சொல்லாதீர்கள். எதிர்முனையில் யார் பேசுகிறார்கள் என்பதை உறுதி செய்துக்கொண்டு பேசுங்கள்.
-
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications