“ஸ்பில்ஓவர் எஃபக்ட்” ஈரான்-இஸ்ரேல் சைபர் தாக்குதல்களால் நீங்களும் பாதிக்கப்படலாம்! உஷார்
சென்னை: ஈரான்-இஸ்ரேல் நாடுகள் ஏவுகணை தாக்குதலுடன் சைபர் தாக்குதல்களையும் நடத்தி வருகின்றன. இதனால் இந்தியா போன்ற மூன்றாம் நாடுகள் கூட பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இதைத்தான் 'ஸ்பில்ஓவர் எஃபக்ட்' என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே நாமும் உஷாராக இருக்க வேண்டியது அவசியமாகும்.
இதற்கு முன்னர் இதுபோன்ற சைபர் தாக்குதல்கள், இலக்கை தாக்குவதை தாண்டி மூன்றாம் நாடுகளுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பது நிரூபணமாகியுள்ளது.

இதற்கு முதல் உதாரணம்தான் 2017ம் ஆண்டு நடந்த 'NotPetya Ransomware தாக்குதல்'. உக்ரைனில் உள்ள நிறுவனங்களை குறி வைத்து இந்த தாக்குதல் தொடங்கப்பட்டது. ரான்சம்வேர் தாக்குதலாக இது அறியப்பட்டாலும், உக்ரைன் எல்லைகளைத் தாண்டி உலகமெங்கும் பரவியது. மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்டன. மில்லியன் கணக்கான டாலர் இழப்புகள் ஏற்பட்டன.
இரண்டாவது உதாரணம் 2022ம் ஆண்டு நடந்த Viasat செயற்கைக்கோள் இணையத் தாக்குதல். ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கிய நாளில், உக்ரைனின் உள்கட்டமைப்புகளை சேதப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்துடன் Viasat Inc-இன் KA-SAT செயற்கைக்கோள் நெட்வொர்க் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதல் உக்ரைனில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு இணைய சேவையை முடக்கியது என்னவோ உண்மைதான்.
ஆனால் அத்துடன் நிற்காமல், எதிர்பாராத விதமாக ஐரோப்பா முழுவதிலும் பரவி, அங்குள்ள பல்லாயிரக்கணக்கான வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் இணைய சேவைகளையும் இது துண்டித்தது. ஜெர்மனி, பிரான்ஸ், ஹங்கேரி, கிரீஸ், இத்தாலி, போலந்து உள்ளிட்ட நாடுகள் இதனால் பாதிக்கப்பட்டன. இராணுவ இலக்கின் மீதான தாக்குதல், பொதுமக்களை எதிர்பாராத விதமாகப் பாதித்த சம்பவத்திற்கு இது மிகப்பெரிய உதாரணமாக சொல்லப்படுகிறது.
மூன்றாவது உதாரணம் 2017ம் ஆண்டு நடந்த WannaCry Ransomware தாக்குதல். இது உலகம் முழுவதும் பரவிய ஒரு ரான்சம்வேர் தாக்குதல், இது பழைய விண்டோஸ் கணினிகளில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை பயன்படுத்தியது. இதன் அசல் நோக்கம் பணம் பறிப்பதாக இருந்தாலும், இதன் பரவல் ஒரு ஸ்பில்ஓவர் தன்மையைக் கொண்டிருந்தது.
இங்கிலாந்தில் உள்ள தேசிய சுகாதார சேவை மருத்துவமனைகள், ஸ்பெயினில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள், ஜெர்மனியின் ரயில்வே அமைப்பு உட்பட 150க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள நிறுவனங்களை இது பாதித்தது. இது ஒரு நாட்டின் இலக்காக இல்லாமல் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இப்போது விஷயத்திற்கு வருவோம். இஸ்ரேல் ஈரான் மீது சைபர் தாக்குதல் நடத்துகிறது எனில், அது இந்தியாவையோ, தமிழ்நாட்டையோ பாதிக்காது என்று உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் இதிலிருந்த நம்மை தற்காத்துக்கொள்ள முடியும்.
உதாரணமாக ஸ்டாரங் பாஸ்வோர்டை பயன்படுத்தும்போது இதன் தாக்குதலிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும். அதேபோல Two-Factor Authentication - 2FA முறையை பயன்படுத்துங்கள். இந்த முறையில் உங்கள் கம்ப்யூட்டரை அணுக இரண்டு வழிகள் உள்ளன. ஒரு வழியில் பாஸ்வேர்டை பயன்படுத்த முடியும். ஒருவேளை பாஸ்வேர்டை திருடப்பட்டாலும், கைரேகை அணுகல் தேவை. எனவே, இரண்டு வழிமுறைகளை பயன்படுத்துங்கள்.
மிக முக்கியமான விஷயம் சாஃப்ட்வேர் அப்டேட். கணினிகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற சாதனங்களின் ஓஎஸ், சாஃப்ட்வேர்களை அப்டேட் செய்து வைத்திருங்கள்.
சந்தேகத்திற்குரிய லிங்க் மற்றும் மின்னஞ்சல்களை திறக்க வேண்டாம். ஃபிஷிங் (Phishing) மின்னஞ்சல்கள் போலியானவை என்பதை அடையாளம் காண கற்றுக்கொள்ளுங்கள். அனுப்புநரின் மின்னஞ்சல் முகவரியை சரிபார்க்கவும். நம்பகமான ஆண்டிவைரஸ் மென்பொருளை பயன்படுத்துங்கள். இதெல்லாம் செய்தாலே சைபர் தாக்குதலிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
-
சீனாவுக்கு எதிராக அமெரிக்கா செய்யும் சதி.. சுதாரித்துக்கொண்ட ஜி ஜின்பிங்.. ஈரான் தான் மையப்புள்ளி! -
முறிந்த பேச்சுவார்த்தை.. முளைக்கும் புது நம்பிக்கை! ஒரே ரூமில் அமர்ந்து பேச அமெரிக்கா- ஈரான் சம்மதம் -
கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை.. அமெரிக்காவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த சீனா! -
டிரம்பின் தடையை மீறி.. ஈரான் செய்த சம்பவம்! டம்மி பீஸ் ஆன அமெரிக்க கடற்படை! -
டிரம்பிடம் பணிந்த சீனா? ஹார்முஸில் அமெரிக்க கடற்படை செய்த மெகா சம்பவம்! ஜலசந்தியில் பதற்றம்! -
ஸ்கெட்ச் ஈரானுக்கு இல்ல, சீனாவுக்கு.. அமெரிக்காவின் Blockade-க்கு பின்னால் தந்திரமான திட்டம்.. முறியடிக்கும் ஜி ஜின்பிங் -
இஸ்ரேல் ஈரானை அடிச்சா..இந்தியாவுக்கு வலிக்கும்! சாப்பாட்டுக்கே அல்லாடப் போகும் 25 லட்சம் இந்தியர்கள்! -
ஆப்பு வச்சுடுச்சே அமெரிக்கா..ஈரானை வட்டமிட்ட ஸ்டீல் அரக்கன்கள்! படபடவென பறந்த எண்ணெய் ரேட்! சிக்கல்? -
ஈரானுக்கு மிகப்பெரிய ஆஃபர் கொடுத்த ரஷ்ய அதிபர் புடின்.. அரண்டுபோன டிரம்ப் 'இது மட்டும் நடக்க கூடாது' -
அமெரிக்க போர் கப்பல்கள் கண்ணில் மண்ணை தூவிய சீனா.. அசால்டாக ஹார்முஸை கடந்து பயணம்! அது எப்படி -
ஈரான் ஈரக்குலையை நடுங்க வைக்கும் அறிவிப்பு.. டீல் பேசும் ட்ரம்ப்! நடு கடலில் தத்தளிக்கும் கப்பல்கள்! -
வரும்.. ஆனா.. வராது! ஈரான் போர் முடியுமா? முடியாதா? மிகத் தெளிவாகக் குழப்பும் டிரம்ப்! அடுத்து என்ன?












Click it and Unblock the Notifications