நாடு விட்டு நாடு ...இலங்கையில் இன்று மாலை புரேவி புயல் கரையை கடந்து தமிழகம் நோக்கி நகரும்!
சென்னை: வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புரேவி புயலாக வலுவடைந்துள்ளது. இந்த புரேவி புயல் இன்று மாலை அல்லது இரவில் இலங்கையில் கரையை கடந்த நிலையில் மன்னார் வளைகுடாவில் நுழைந்து தமிழகம் நோக்கி நகரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவாகும் புயல்கள் பொதுவாக தமிழக கடற்பரப்பை நோக்கி நகருவதாக இருக்கும். ஆனால் புரேவி புயல் இம்முறை இருநாடுகளில் கரையை கடக்கிறது.

வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புரேவி புயலாக வலுவடைந்துள்ளது. இந்த புரேவி புயல் தற்போது இலங்கையின் கிழக்கு பகுதியான திருகோணமலையில் இருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருக்கிறது.

இப்புரேவி புயல் இன்று மாலை அல்லது இரவில் இலங்கையின் கிழக்கு கடற்பரப்பான மட்டக்களப்பு- பருத்தித்துறை இடையே கரையை கடக்கிறது. இதனால் இலங்கையில் அதீத கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது கரையை கடந்த நிலையிலும் புரேவி புயலாகவே மன்னார் வளைகுடாவுக்குள் நாளை அதிகாலை நுழைந்து தமிழகத்தை நோக்கி நகருகிறது.

தமிழக கடற்பரப்பில் ஒருநாள் முழுவதும் பயணிக்கும் புரேவி புயல் நாளை மறுநாள் டிசம்பர் 4-ந் தேதி பாம்பன்- கன்னியாகுமரி இடையே கரையைக் கடக்க உள்ளது. இதனால் தென்தமிழகம், கேரளாவில் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம், கேரளாவின் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இப்புரேவி புயல் இலங்கை, இந்தியா ஆகிய இருநாடுகளின் கரையை கடக்கும் சிறப்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications