தமிழகத்தை அச்சுறுத்திய கஜா புயல்.. வேதாரண்யத்தில் கரையைக் கடந்தது!
Recommended Video

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள 'கஜா' புயலின் கண் நாகைக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே கரையைக் கடந்தது. தற்போது புயலின் பின் பகுதி கரையைக் கடப்பதால் மீ்ண்டும் சூறாவளிக் காற்று வீசி வருகிறுது.
முழு புயல் கரையை கடக்க இன்னும் 1.30 மணி நேரம் ஆகும். புயல் கரையை கடக்க அதிகாலை 4 மணி வரை ஆகும். வங்கக்கடலில், அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, நவம்பர் 10ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேலும் வலுப்பெற்று கடந்த 11ம் தேதி புயலாக மாறிய நிலையில், அந்த புயலுக்கு கஜா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
முதலில் கடலூர்-ஸ்ரீஹரிகோட்டா நடுவே கரையை கடக்கும் என கணிக்கப்பட்ட கஜா புயல் திசை மாறி, கடலூர் மற்றும் பாம்பன் நடுவே வியாழக்கிழமையான இன்று மாலை கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்து இருந்தது.

காலை நிலவரம்
இன்று மாலை 7 மணி நிலவரப்படி புயலானது நாகைக்குக் கிழக்கே 138 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்தது. அது மணிக்கு 11 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்தது. இரவுக்கு மேல் அது வேகம் பிடித்தது.

தீவிர புயல்
இன்று இரவு 8 மணியிலிருந்து 11.30 மணிக்குள் புயல் முழுமையாக கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 8 மணிக்கு மேல் புயலானது நாகை - வேதாரண்யம் இடையே கரையைக் கடக்க ஆரம்பித்தது.
|
வேதாரண்யத்தில் கடும் பாதிப்பு
புயல் கரையைக் கடந்த இடம் வேதாரண்யத்திற்கு அருகே என்பதால் வேதாரண்யம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. புயல் காற்றால் வேதாரண்யமே பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மரங்கள் சாய்ந்துள்ளன. ஊரே கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. ஆற்காட்டுத்துறை பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கண் பகுதி கரையைக் கடக்கிறது
தற்போது புயலின் கண் பகுதியான கரையைத் தொட்டு கடந்து வருகிறது. இதனால் பேய்க்காற்றின் வேகம் குறைந்துள்ளது. அடுத்து புயலின் பின் பகுதியானது கரையைக் கடக்கும்போது மறுபடியும் சூறைக் காற்று வீசும். இதனால் பொதுமக்கள் தொடர்ந்து பாதுகாப்பாக தங்கியிருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பிய்த்துக் கொண்டு போன கூரைகள்
வேதாரண்யத்தை அடுத்துள்ள புஷ்பவனம், செம்போடை, நாலுவேதபதி, தோப்புத்துறை, கோடியக்கரை பகுதிகளில் அதிக மரங்கள் முறிந்துள்ளன, கூரைகளும் பெயர்த்து எறியப்பட்டுள்ளன.

புயலின்போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
புயலின்போது கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலியானார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கெல்லாம் கன மழை பெய்து வருகிறது. காரைக்கால் மாவட்டத்திலும் முழு அளவில் மின்சாரம் இல்லை.

பாம்பன் பாலம் மூடப்பட்டது
கஜா புயல் கரையைக் கடந்து வருவதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கன மழை கொட்டி வருகிறது. ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பன் பாலம் மூடப்பட்டது. புயலால் பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இரவு 11 மணி முதல் விடாமல் கன மழை பெய்து வருகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications