ஆட்டத்தை ஆரம்பிக்கும் மோந்தா புயல்.. சென்னையில் நாளை காலையில் இருக்கு சம்பவம்.. தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நாளை காலையில் இருந்து கனமழை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.சென்னையில் நாளை கனமழை வெளுக்கும் என வானிலை ஆய்வு மையமும் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் மோந்தா புயல் அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் என வானிலை மையம் கூறியிருந்தது.

தமிழகத்தில் கடந்த 16 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்று முதல் தினமும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நீர் நிலைகளில் தண்ணீர் மட்டம் கடகடவென உயர்ந்து வருகிறது. கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

cyclone-mondha-to-hit-heavy-rain-expected-in-chennai-tomorrow-alerts-tamil-nadu-weatherman

தமிழ்நாடு வெதர்மேன் ட்வீட்

தற்போது தென் மேற்கு வங்கக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. இந்த புயலுக்கு மோந்தா புயல் என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் இருந்து 720 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது.

நாளை மறுநாள் கரையை கடைக்கும் நிலையில், நாளை சென்னையில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் பிரபல தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் நாளை காலையில் இருந்து சென்னையில் கனமழை பெய்ய தொடங்கும் என எகஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நாளை காலையில் இருந்து சென்னையில் பலத்த மழையை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக வானிலை மையமும், நாளை சென்னையில் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு நிற எச்சரிக்கை விட்டிருந்தது. வானிலை மையம் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னைக்கு மிக கனமழை அலர்ட்

நாளை திங்கட்கிழமை வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

செவ்வாய்கிழமை எங்கெல்லாம் மழை பெய்யும்

28-10-2025: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னையில் நாளை எப்படி இருக்கும்?

29-10-2025 முதல் 01-11-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் நாளை (27-10-2025): வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். என்று கூறப்பட்டு இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+