சென்னையில் காலையிலேயே உயர்ந்த வணிக சிலிண்டர் விலை.. ஆனாலும் ஹேப்பி நியூஸ் இருக்கு
சென்னை: வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை சென்னையில் அதிரடியாக உயர்ந்துள்ளது. டிசம்பர் 1ம் தேதியான இன்று முதல் சிலிண்டர் விலை 26.50 காசுகள் உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையிலே, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் போன்றவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்ளும் உரிமை உள்ளது. பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்த்தப்படும் அல்லது குறைக்கப்படும். அதேநேரம் சிலிண்டர் விலையை மாதத்தின் முதல் நாள் அல்லது 16ம் தேதி அன்று மாற்றி அமைக்கலாம்.

அந்த வகையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி மாற்றி அமைப்பது வழக்கமாக உள்ளது. அதன்படி, டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதியான இன்று சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்துள்ளன. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை இந்தியா முழுவதும் உயர்ந்துள்ளது.
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை சென்னையில் இன்று முதல் சிலிண்டர் விலை 26.50 காசுகள் உயர்ந்துள்ளது. ரூ. 1,942-க்கு விற்கப்பட்ட வணிக சிலிண்டர், தற்போது ரூ.1,968-க்கு விற்பனையாகிறது. முன்னதாக கடந்த செப்டம்பரில், 19 கிலோ எடைகொண்ட சிலிண்டருக்கு 203 ரூபாய் உயர்த்தப்பட்டிருந்தது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
கடந்த நவம்பரில் சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.918.50 விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதேநேரம் கடந்த மாதம் கடை சிலிண்டர் அதாவது வணிக சிலிண்டர் 57 ரூபாய் குறைந்து 1942 ரூபாய்க்கு சென்னையில் விற்பனை செய்யப்பட்டது. இப்போது டிசம்பரில் 26.50 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.1,968-க்கு விற்பனையாகிறது.
ஆனால் டிசம்பரில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.918-க்கு விற்பனையாகிறது. உஜ்வாலா திட்டத்தில் உள்ளவர்களுக்கு சிலிண்டருக்கான மானியம் 300 ரூபாய் வரை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விரைவில் அவர்களுக்கான மானியம் அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications