"அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை".. 90% மா.செ.க்களின் விருப்பம்.. யார் அவர்.. ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி
சென்னை: அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவை என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கோரிக்கை எழுந்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்.
அதிமுகவில் தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு நீண்ட நாட்களாக ஒற்றைத் தலைமை கோரிக்கை வலுத்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க அதிமுகவை கைப்பற்ற சசிகலா ஒரு பக்கம் முயற்சித்து வருகிறார்.
மேலும் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு பதிலாக அதிமுக பொதுச் செயலாளர் என்ற பதவி உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வரும் 23-ஆம் தேதி அதிமுக பொதுக் குழு கூடுகிறது.

பொதுக் குழு
இந்த நிலையில் பொதுக்குழுவில் என்னென்ன விஷயங்கள் விவாதிக்கப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்த இன்றைய தினம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்திற்கு செல்போன் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டது.

மைத்ரேயன்
இதனால் மைத்ரேயன் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் பாதியிலேயே சென்றுவிட்டார். இந்த நிலையில் இந்த கூட்டம் ஓபிஎஸ்- எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்து கொண்டிருக்கும் போதே அலுவலகத்தின் வெளியே ஒற்றைத் தலைமை குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோரின் ஆதரவாளர்கள் தனித்தனியே கோஷங்களை எழுப்பினர்.

ஜெயக்குமார் பேட்டி
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்தும் ஆலோசித்தோம். ஒற்றைத் தலைமை தேவை என்பதையே அதிமுகவின் பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
ஒற்றைத் தலைமை யார் என்பதை அதிமுக முடிவு செய்யும். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்படும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.

எடப்பாடி பழனிச்சாமி
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்கிறார் என ஓபிஎஸ்ஸின் சொந்த மாவட்டமான தேனியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் இந்த கூட்டத்திலும் ஒற்றை தலைமை கோஷம் எழுந்துள்ளது அடுத்தடுத்த திருப்பங்களுக்கு வித்திடும் வகையில் உள்ளது.
-
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications