"கமலாலயம்.." கிண்டல் செய்த உதயநிதி.. "காரில் இலங்கை போய் பார்க்கட்டும்.." கொந்தளிக்கும் ஜெயக்குமார்
சென்னை: உதயநிதியின் கார் இலங்கைக்கு சென்றால் அங்கு இலங்கை தமிழர்களின் ஆவி சும்மா விடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
Recommended Video
நில அபகரிப்பு வழக்கில் ஜாமீனில் வெளிவந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 5ஆவது முறையாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் பேசுகையில் திமுக ஆட்சியில் கவர்னர் முதல் காவலர்கள் வரை பாதுகாப்பு இல்லை. தலையே சரியில்லாத நேரத்தில் வால் எப்படி சரியாக இருக்கும்.

திமுக அரசு
திமுக அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டம் 356 ஐ நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறது. சென்னை தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் சந்தேகமான முறையில் விசாரணை கைதி உயிரிழந்துள்ளார். இந்த வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு விசாரிக்க வேண்டும்.

தண்டனை
அவர்கள் விசாரித்து உரிய நபர்களுக்கு தண்டனை பெற்று கொடுத்தால் மட்டுமே லாக் அப் மரணங்கள் தடுக்கப்பட முடியும். போலீஸார் விசாரித்தால் அவர்களுக்கு ஆதரவாகத்தான் அமையும். திமுக அரசின் மக்கள் விரோத செயல் குறித்து அதன் கூட்டணி கட்சிகள் யாரும் குரல் கொடுக்கவில்லை.

உதயநிதி கார்
இதையெல்லாம் மக்கள் ஒரு போதும் விரும்ப மாட்டார்கள். எடப்பாடி பழனிச்சாமி எனது காரை எடுத்துக் கொண்டு செல்லலாம். ஆனால் கமலாலயம் செல்ல வேண்டாம் என உதயநிதி சொல்லியது சரியில்லை. உதயநிதி அவரது காரை எடுத்துக் கொண்டு இலங்கைக்கு செல்லட்டும். அங்கு 1.5 லட்சம் இலங்கை தமிழர்களின் ஆவி அவரை சும்மா விடாது.

மின்சார தட்டுப்பாடு
செயற்கையான மின்சார தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விட்டு, அரசின் மீது திமுக அரசு பழி போட்டுள்ளது. ரூ 2,113 கோடிக்கு மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது. பொதுமக்களை இருட்டுக்குள் தள்ளி கஷ்டப்படுத்தும் இந்த பாவம் சும்மா விடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
-
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!












Click it and Unblock the Notifications