டீ - பிஸ்கட் டூ ஆயில் - ஷாம்பு வரை.. கிடுகிடுவென உயரப்போகும் விலை.. வெளியான லிஸ்ட்.. ஏன் தெரியுமா?
சென்னை: டீ, பிஸ்கட் முதல் எண்ணெய், ஷாம்பு வரை நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மாதாந்திர மக்களின் பட்ஜெட்டில் அதிக செலவு ஏற்பட உள்ள நிலையில் இந்த பொருட்களின் விலையேறுவதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
நாம் அனைவரும் தினமும் டீ, பிஸ்கட், எண்ணெய், ஷாம்பு உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில் தான் இன்னும் சில நாட்களில் இந்த பொருட்களின் விலை என்பது கிடுகிடுவென அதிகரிக்க உள்ளதாக அதிர்ச்சி தகவல்வெளியாகி உள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக 2 விஷயங்கள் சொல்லப்படுகிறது. ஒன்று உற்பத்தி செலவு அதிகரிப்பு. இன்னொன்று உணவு பண வீக்கம். இதன் காரணமாக கடந்த ஜூலை - செப்டம்பர் மாதம் வரை முடிவடைந்த 2வது காலாண்டில் எஃப்எம்சிஜி நிறுவனங்கள் (Fast Moving Consumer Goods or FMCG) மோசமான நிலையை எட்டி உள்ளது.
எஃப்எம்சிஜி நிறுவனங்கள் என்பது பொதுமக்களுக்கு பாக்கெட்டுகள் மூலம் குறைந்த விலையில் தினசரி பொருட்களை வழங்கும் நிறுவனங்களாகும். இந்நிலையில் தான் எஃப்எம்சிஜி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கான மூலப்பொருட்களின் விலை என்பது உயர்ந்துள்ளது. பாமாயில், காபி, கோகோ (cocoa) உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை என்பது சமீபத்தில் அதிகரித்துள்ளது.
இதனால் எஃப்எம்சிஜி நிறுவனங்களின் தயாரிக்கும் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதன்படி விரைவில் டீ, பிஸ்கட், எண்ணெய், ஷாம்பு உள்ளிட்டவற்றின் விலைகளை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது எஃப்எம்சிஜி நிறுவனங்களின் தயாரிப்புகளின் விற்பனை என்பது சற்று குறைந்துள்ளது. குறிப்பாக ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் (HUL), கோத்ரேஜ் கன்சூமர் புராடக்ட்ஸ் லிமிடெட் (GCPL), மாரிகோ (Marico), ஐடிசி (ITC), டாடா கன்சூமர் ப்ராடெக்ட்ஸ் லிமிடெட் (TCPL) போன்ற பெரிய எஃப்எம்சிஜி நிறுவனங்களின் விற்பனைகள் சரிந்துள்ளன. இதனால் அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்ய பொருட்களின் விலையை அதிகரிக்கும் நிலைக்கு தள்ளப்பபட்டுள்ளன.
இதுதொடர்பாக ஜிசிபிஎல் நிறுவன உரிமையாளர் சுதீர் சிதாபதி கூறுகையில், ‛‛ இந்த நிதியாண்டின் 2வது காலாண்டியில் பல இடையூறுகளை சந்தித்துள்ளோம். செலவுகளை குறைக்கவும், லாபத்தை மீட்டெடுக்கவும் விலை உயர்வை அமல்படுத்தும் திட்டம் உள்ளது'' என்றார். அதேபோல் டாபர் இந்தியா நிறுவனமும் விலையேற்ற திட்டத்தில் உள்ளது. இந்த நிறுவனம் டாபர் தயாரிப்புகளை வழங்கி வருகிறது. இதனால் டாபர் சியவன்ப்ராஷ், புதினா ஹாரா மற்றும் ரியல் ஜூஸ் உள்ளிட்டவற்றின் விலை என்பது அதிகரிக்கலாம்.
மேலும் நெஸ்லே இந்தியாவின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான சுரேஷ் நாராயணன் கூறும்போது, ‛‛ அதிகப்படியான உணவு பவீக்கம் உள்ளது. , பழங்கள், காய்கறிகள் மற்றும் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.இது குடும்பத்தின் வரவு செலவு திட்டத்தை பாதித்துள்ளது. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்'' என்றார். நெஸ்லே இந்தியாசார்பில் மேகி, கிட் கேட் மற்றும் நெஸ்கேஃப் போன்ற பிராண்டுகள் உள்ளன. இதனால் இந்த விலைகள் அதிகரிக்கலாம்.
டாடா கன்சூமர் புராடெக்ட்ஸ் லிமிடெட் தலைமை பொறுப்பில் உள்ள சுனில் டி'சோசா கூறுகையில், ‛‛நகர்புறங்களில் வசிக்கும் மக்களின் செலவு செய்யம் பழக்கம் குறைந்துள்ளது. மேலும் உணவு பொருட்களின் விலை உயர்வு என்பது நம்மை அதிகமாக பாதிக்கும்'' என்றார். இதுதவிர சர்ப் (Surf), ரின் (Rin), லக்ஸ்( Lux), பாண்ட்ஸ் (Ponds), லைஃப்பாய் ( Lifebuoy), லக்மி (Lakme), ப்ரூக்பாண்ட் ( Brooke Bond), லிப்டான் (Lipton), ஹார்லிக்ஸ் (Horlicks) உள்ளிட்டவற்றை தயாரிக்கும் எச்யூஎல் (HUL) தலைமை நிர்வாகி ரோஹித் கூறுகையில், ‛‛நகர்புறத்தை மையமாக கொண்ட பொருளாதார வளர்ச்சி என்பது சரிவை சந்தித்துள்ளது. ஆனால் கிராமங்களில் விற்பனை என்பது அப்படியே உள்ளது'' என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications