3 நாட்களாக சட்டசபைக்கு வராத பால்வளத்துறை அமைச்சர் நாசர்! பின்னணி காரணம் என்ன தெரியுமா?
சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் கடந்த 3 நாட்களாக சட்டசபைக்கு வராதது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் உள்ள கிரீன்வேஸ் சாலை பங்களாவில் தங்கியிருக்கும் அமைச்சர் நாசர் வீட்டில் இருந்தபடியே சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு மூலம் பார்த்து அறிந்துகொள்கிறாராம்.
இதனிடையே இது குறித்து நாம் விசாரித்ததில் அமைச்சர் நாசருக்கு காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் 10வது நாள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பரபரப்புடன் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பால்வளத்துறை அமைச்சர் நாசரை கடந்த 3 நாட்களாக சட்டசபையில் பார்க்க முடியவில்லை. ஏற்கனவே பால் கொள்முதல் பிரச்சனை பெரியளவில் சென்றுக் கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர் நாசர் சட்டசபைக்கு வராதது சட்டசபை வளாகத்தில் பேசு பொருளாக இருந்தது.

என்ன காரணம்?
இதனிடையே இது குறித்து நாம் விசாரித்ததில், அமைச்சர் நாசருக்கு காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டிருப்பதாகவும் அதன் காரணமக சென்னை கிரீன்வேஸ் சாலை பங்களாவில் தங்கியிருந்து ஓய்வெடுத்து வருவதாகவும் தகவல் கிடைத்தது. மேலும், வீட்டிலேயே காய்ச்சலுக்கான சிகிச்சையும் அவர் எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. மற்றபடி அவர் சட்டசபைக்கு செல்லாததற்கு வேறு காரணம் இல்லை எனக் கூறப்பட்டது.

விசிட்டர்ஸ் அனுமதியில்லை
அமைச்சர் நாசர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் இருப்பதால் கடந்த 4 நாட்களாக விசிட்டர்களை சந்திப்பதை கூட தவிர்த்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் நாசரை பொறுத்தவரை ஏற்கனவே இரண்டு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சட்டசபை கூட்டத் தொடரின் போது அமைச்சர் துரைமுருகன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 3 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தது திரும்பிப் பார்க்கத் தக்கது.

மிகுந்த கவனம்
அமைச்சர்களை பொறுத்தவரை சட்டசபை நடக்கும் நாட்களில் தங்கள் உடல்நலத்தை மிகுந்த கவனத்துடன் பார்த்துக் கொள்வார்கள். ஏனெனில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கும் பொறுப்பு அவர்களுக்கு இருப்பதால் அவர்கள் சட்டசபைக்கு லீவு போடுவதை தவிர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது.












Click it and Unblock the Notifications