Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணன் முரளியை சந்திக்க விரும்பாத டேனியல் பாலாஜி.. அவரே சொன்ன சுவாரஸ்ய பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உச்ச நட்சத்திரமாக இருந்த நடிகர் முரளியின் உடன்பிறவா சகோதரராக இருந்த போதிலும் அவருடைய பெயரை ஒரு இடத்தில் கூட பயன்படுத்தி டேனியல் பாலாஜி வாய்ப்புகளை வாங்கவில்லை. அவர் தனது திறமையையும் நடிப்பையும் உழைப்பையும் மட்டுமே நம்பி இறங்கியுள்ளார்.

நடிகை ராதிகா சரத்குமாரின் சித்தி எனும் டிவி சீரியல் மூலம் டேனியல் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார் பாலாஜி. பின்னாளில் இவர் டேனியல் பாலாஜி என அழைக்கப்பட்டார். இவர் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Daniel Balaji not want to get influence from his brother Murali

இவர் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களிலேயே நடித்து மிரட்டியிருப்பார். அதிலும் வேட்டையாடு விளையாடு படத்தில் இவரது நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது. வில்லன் கேரக்டருக்கு டேனியல் பாலாஜியின் பாடி லேங்குவேஜ், மேனரிசம், குரல் ஆகியவை பக்காவாக பொருந்தும்.

இவர் சென்னை புறநகர் பகுதியான ஆவடியில் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு கோயில் கட்டியுள்ளார். தனது தாயின் ஆசைக்காக இந்த கோயிலை அவர் கட்டியிருந்தார். அதன் கும்பாபிஷேகம் கூட கடந்த மார்ச் 9ஆம் தேதிதான் நடைபெற்றது. ஆன்மீகம் மீது அதிக நாட்டத்துடன் இருந்தார்.

இவருக்கு கடந்த 29ஆம் தேதி இரவு 11 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருடைய உறவினர்கள் டேனியலை , கொட்டிவாக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தகவலறிந்த இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன், மருத்துவமனைக்கு சென்றே டேனியலின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து டேனியல் பாலாஜி தனது கண்களை தானமாக அளிப்பதாக ஏற்கெனவே எழுதி கொடுத்திருந்ததை அடுத்து அவரது கண்கள் தானமாக பெறப்பட்டன. பின்னர் அவருடைய உடல் அவருடைய பூர்வீக இடமான புரசைவாக்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. டேனியலின் தாய், மகனின் உடலை பார்த்து கதறி அழுதது அங்கிருந்தோர் மனதை கசக்கி பிழிந்தது.

இதையடுத்து மாலை அவருடைய உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டு ஓட்டேரியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மறைந்த "இதயம்" நடிகர் முரளியின் உடன்பிறவா சகோதரர் ஆவார். அவரை போலவே டோனியலும் இளம் வயதில் மாரடைப்பால் மரணமடைந்து விட்டார். இந்த நிலையில் டேனியல் எப்படிப்பட்டவர் என்பது குறித்து பலர் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் பெரிய நடிகராக முரளி இருந்த போதிலும் அவரிடம் சிபாரிசு என கேட்டு டேனியல் ஒரு முறை கூட நின்றதே இல்லையாம். இது குறித்து டேனியலே பழைய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: நான் ஸ்கூல் சென்றுக் கொண்டிருக்கும் போது முரளி அண்ணன் நடிகர். நான் திரைப்படக் கல்லூரிகளில் படிக்கும் போதெல்லாம் மிகப் பெரிய நடிகராகிவிட்டார்.

இதனால் நான் அவர போய் அடிக்கடி சந்திக்கவே மாட்டேன். சிபாரிசுக்காக அவரை நான் சந்திப்பதாக யாராவது சொல்லிவிடுவார்களோ என்பதற்காகவே அவரை பார்ப்பதை தவிர்த்து வந்தேன். திரைப்பட கல்லூரியில் படித்து முடித்த பிறகும் முரளி அண்ணன் என்னை ஒரு நாள் அவருடைய வீட்டிற்கு அழைத்தார். அவரை பார்க்க சென்றேன். அவர் சிறு வயதில் பழகியதை போல் என்னுடன் பழகுவாரா என யோசித்தேன். ஆனால் அதில் எள் முனை அளவும் மாற்றமில்லாமல் என்னுடன் பழகினார்.

வில்லனாக நடிக்க வேண்டும் என நான் சொன்ன போது, "அதென்ன வில்லனாகத்தான் நடிக்க வேண்டுமா" என கேட்டார். அதற்கு நான் அதான் ஹீரோவாக நடிக்க நீங்கள் உள்ளீர்களே என்பேன். முரளி அண்ணனின் அப்பா, அதாவது எனது பெரியப்பா கன்னட படங்களில் நிறைய பணியாற்றியுள்ளார். அவர் ஆசைக்காக நான் கன்னடத்திலும் நடித்துள்ளேன். இவ்வாறு டேனியல் பாலாஜி தனது பழைய பேட்டியில் கூறியிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+