நாகர்கோவில், பெங்களூர் வந்தே பாரத் ரயிலால் நொந்து போகும் பயணிகள்.. என்ன சொல்கிறார்கள்
சென்னை: மதுரை - பெங்களூர், சென்னை - நாகர்கோவில் இடையே புதிதாக தொடங்கப்பட்ட 2 வந்தே பாரத் ரயில்களும் பயணிகளுக்கு அதிருப்தியை கொடுத்துள்ளது. சாதாரண ரயில்களை விட பலமடங்கு கட்டணம் அதிகம் என்பதாலும், இரவு நேரத்தில் இயக்கப்படாமல் பகல் நேரத்தில் இயக்கப்படுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிரமத்தோடு தான் பயணம் செய்யும் நிலை இருப்பதாக பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் பயணிகளின் பயண தேவையை தீர்த்து வைப்பதில் பெரும் வங்கு வகிப்பது ரயில்கள்தான். மலிவான கட்டணம், பாதுகாப்பான சேவை, சொகுசு பயணம் என பல வசதிகளும் இருப்பதால் அனைத்து தரப்பு மக்களும் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறார்கள். ரயில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு கடந்த 2019 -ஆம் ஆண்டு வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டது.

வந்தே பாரத் ரயில்கள்: தற்போது நாடு முழுவதும் 86 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் அனைத்தும் பயணிகள் அமர்ந்து செல்லும் வசதி கொண்டதாகும். பகல் நேரத்தில் மட்டுமே இயக்கப்படும் ரயிலாக உள்ளது. தமிழகத்திலும் 6 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கும் மதுரையில் இருந்து பெங்களூருக்கும் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ரயில்களை நேற்று முன் தினம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
பகல் நேர பயணம்: சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு தினமும் 5-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை தவிர மற்ற அனைத்தும் இரவு நேர ரயில்கள்தான். 500 கிலோமீட்டருக்கு மேல் உள்ள தொலைவு கொண்ட நகரங்கள் என்பதால் சராசரியாக 10 மணி நேரம் பிடித்து விடுகிறது. இதனால், பகல் நேரத்தில் செல்வதை விட இரவில் பயணம் செய்வதையே தொலை தூரங்களுக்கு செல்லும் பயணிகள் விரும்புகிறார்கள்.
இரவு நேர ரயில்கள்: இதற்கு காரணம்.. பகல் நேரத்தில் தங்கள் பணிகளை முடித்துவிட்டு, இரவில் பயணம் செய்தால், விடிந்தால் ஊருக்கு போய் அங்குள்ள வேலைகளையும் எந்த சிரமும் இன்றி செய்துவிடலாம். எனவே, தொலை தூரங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் இரவு நேர ரயில்களையே பயணிகள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், தற்போது விடப்படும் வந்தே பாரத் ரயில்கள் அனைத்தும் பகல் நேரத்தில்தான் இயக்கப்படுகின்றன.
கட்டணமும் அதிகம்: அதுமட்டும் இன்றி கட்டணமும் மிக அதிகமாக உள்ளது. மதுரையில் இருந்து பெங்களூர் செல்வதற்கு வந்தே பாரத் ரயிலில், ஐஆர்சிடிசி இணையதளத்தில் புக்கிங் செய்ய ரூ.1,575 கட்டணம் நிர்ணையிக்கப்பட்டுள்ளது. எக்ஸிகியூட்டிவ் சேர்கார் என்றால் ரூ.2865 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதே வழித்தடத்தில் இயங்கும் பிற விரைவு ரயில்களில் ஸ்லீப்பர் கோச்களில் ரூ.275 மட்டுமே கட்டணம் ஆகும். ஏசி வசதி கொண்ட மூன்றாம் வகுப்பு கோச்சில் கட்டணம் ரூ.745 ஆகும்.
பயணிகள் அதிருப்தி: ஆனால், வந்தே பாரத்தில் கிட்டத்தட்ட இருமடங்கிற்கும் அதிகமாக டிக்கெட் கட்டணம் உள்ளது பயணிகளுக்கு அதிருப்தியை கொடுத்துள்ளது. சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலிலும் எக்ஸிகியூட்டிவ் சேர்காரில் ரூ.1,760-ம், எக்ஸிகியூட்டிவ் சேர்கார் என்றால் ரூ.3,240-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதே வழித்தடத்தில் இயங்கும் சாதாரண விரைவு ரயில்களில் படுக்கை வசதி கொண்ட பெட்டியில் ரூ.425-ம், ஏசி வசதி கொண்ட மூன்றாம் வகுப்பு பெட்டியில் பயணிக்க 1025-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அமர்ந்துகொண்டே பயணம்: ஆனால் வந்தே பாரத் ரயிலில் கட்டணம் என்பது அதிகமாக உள்ளது. இதனால், வந்தே பாரத் ரயிலின் கட்டணம் பயணிகளுக்கு சற்று அதிர்ச்சியை கொடுப்பதாகவே உள்ளது. நீண்ட தொலைவு செல்வதால் அமர்ந்து கொண்டே பயணிப்பதும் பயணிகளுக்கு அசவுகர்யத்தை கொடுப்பதாகவே உள்ளது. அதிலும் முதியவர்கள், குழந்தைகளுடன் பயணிப்பவர்களுக்கு கொஞ்சம் சிரமம்தான்.
பயணிகள் கோரிக்கை: இதனால் தொலை தூரங்களுக்கு பகல் நேரத்தில் ரயில்களை இயக்குவதை விட இரவு நேரத்தில் ரயிலை இயக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே, தொலை தூரங்களுக்கு இரவு நேர ரயிலை விடாமல் வந்தே பாரத்தால் நீண்ட தூர பயணிகளுக்கு லாபமில்லை. அதேபோல, வந்தே பாரத் ரயில்களின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் சாதாரண பயணிகளுக்கு எட்டாக்கனியாக இந்த ரயில்கள் மாறிவிடும் என்பது பயணிகளின் ஆதங்கமாக உள்ளது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications