சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெளி நாட்டு தடுப்பூசிகளுக்கு இனி இந்தியாவில் டிரையல் இல்லை.. நேரடியாக மக்களுக்கு செலுத்த முடிவு

Google Oneindia Tamil News

சென்னை: ஃபைசர் மற்றும் மாடர்னா போன்ற வெளிநாட்டு தடுப்பூசிகள் இனி இந்திய சந்தைக்கு தாமதம் இன்றி வந்தடைய வழி ஏற்பட்டுள்ளது. உள்ளூர் டிரையல் என்ற நடைமுறையை நீக்குவதாக இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

Recommended Video

    1st Dose Covishield.. 2nd Dose Covaxin மாற்றி போட்டால் என்னவாகும்?

    குறிப்பிட்ட நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு தடுப்பூசிகள் மற்றும் அவசரகால பயன்பாட்டிற்காக WHO அனுமதி தந்த தடுப்பூசிகளுக்கு, இனி இந்தியாவில் சோதனைகள் தேவையில்லை என்று இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் அமைப்பு (டி.சி.ஜி.ஐ) கூறியுள்ளது.

    வழக்கமாக எந்த ஒரு நாட்டு தடுப்பூசியாக இருந்தாலும், இந்திய அரசு அங்கீகாரம் கொடுத்த பிறகும், இந்தியாவில் டிரையல் நடத்தப்பட வேண்டும்.

    தடுப்பூசி எப்படிப்பூ.... நம்ம தலைவர் வடிவேலு ஸ்டைலில்.. கிளைமேக்ஸ்தான் செம்ம ஹைலைட்! ஜாலி வீடியோ தடுப்பூசி எப்படிப்பூ.... நம்ம தலைவர் வடிவேலு ஸ்டைலில்.. கிளைமேக்ஸ்தான் செம்ம ஹைலைட்! ஜாலி வீடியோ

     உள்ளூர் சோதனை

    உள்ளூர் சோதனை

    உள்ளூர் சூழலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு மருந்து எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிய இந்திய மக்கள் மீது "பிரிட்ஜிங் சோதனைகள்" என்ற பெயரில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், இனிமேல் நேரடியாக தடுப்பூசியை இந்தியர்களுக்கு செலுத்த முடியும்.

    தாமதம்

    தாமதம்

    டிசம்பர் மாதத்திற்குள் மொத்த இந்தியாவிற்கும் தடுப்பூசி போடுவோம் என்று அரசு உறுதியளித்துள்ளது. ஆனால் டிரையல்கள் நடத்தினால் தாமதமாகிவிடும் என்பதால் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

     தேவை அதிகரிப்பு

    தேவை அதிகரிப்பு

    டி.சி.ஜி.ஐ தலைவர் வி.ஜி. சோமானி வெளியிட்டுள்ள கடிதத்தில் "சமீப காலமாக கோவிட் -19 கேஸ்கள் அதிகரித்து வருவதையும், இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் அவசியத்தையும் அடுத்து இந்தியாவில் மிகப்பெரிய தடுப்பூசி தேவை இருக்கும் அடிப்படையிில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

    தடுப்பூசி பற்றாக்குறை

    தடுப்பூசி பற்றாக்குறை

    தற்போது நாட்டில் தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. ஆனால் பல மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலும் தற்காலிகமாக தடுப்பூசி பணிகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 3 முதல் 6-ம் தேதி வரை தடுப்பூசி போட முடியாத சூழல் இருப்பதாக அரசு கூறியது. இதற்கு காரணம் மத்திய அரசு போதிய ஊசிகளை சப்ளை செய்யாததுதான்.

    மத்திய அரசு தாமதம்

    மத்திய அரசு தாமதம்

    இந்த நிலையில், ஃபைசர், மாடர்னா நிறுவன தடுப்பூசிகளை இந்தியாவுக்கு கொண்டுவர மிக தாமதமாக இப்போதுதான் மத்திய அரசு பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளது. ஆனால் உலகின் பல நாடுகள் ஏற்கனவே அந்த நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துள்ளன.

    English summary
    Foreign vaccines like Pfizer and Moderna can now reach the Indian market without delay. Drug Controller General of India (DCGI) has said it will abolish the practice of local trial.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X