சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பணத்தை காட்டி வளைக்க துடிக்கும் அதிமுக.. நீக்கு போக்காக நடந்து கொள்ளும் அமமுக.. ஷாக்கில் தினகரன்!

பணத்தை காட்டி அமமுக நிர்வாகிகளை வளைக்க அதிமுக திட்டமிடப்படுவதாக கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அமமுக-வுக்கு பரிசுப் பெட்டி சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்

    சென்னை: மண்டையை பிளக்கும் வெயிலில் 2 விஷயம் தீயாய் உலாவி வருகிறது.. அது அமமுக, அதிமுக சம்பந்தப்பட்ட செய்திதான்!

    அமமுகவும், அதிமுகவும் விரைவில் இணைய போவதாக ஏற்கனவே பலமுறை செய்திகள் வந்து நமக்கு புளித்து போய்விட்டது. அதற்கான சாத்தியமும் சுத்தமாக இல்லாமல் போய்விட்டது.

    தினகரன் தனியாக தேர்தலை சந்திக்கிறார். அதன்படி வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டார். இதில் ஒரு சில தொகுதிகளில் திமுக, அதிமுக வேட்பாளர்களை விட அமமுக வேட்பாளர்கள் பலம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

    தமிழகத்தில் இதுவரை ரூ.54.43 கோடி ரொக்கம்... கிலோ கணக்கில் தங்கம் & வெள்ளி பறிமுதல் தமிழகத்தில் இதுவரை ரூ.54.43 கோடி ரொக்கம்... கிலோ கணக்கில் தங்கம் & வெள்ளி பறிமுதல்

    ஷாக் விஷயம்

    ஷாக் விஷயம்

    இதுதான் திமுகவைவிட அதிமுகவுக்கு அதிக ஷாக் தந்த விஷயம்! அதனால் அந்த குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் எப்படியாவது தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும், அமமுக வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவும், அமமுக நிர்வாகிகளை ‘பணத்தை வைத்து இழுத்து பிடிக்கும் வேலையில் இறங்கி உள்ளார்களாம்.

    மெஜாரிட்டி

    மெஜாரிட்டி

    இது எம்பி தேர்தலை மட்டும் மனதில் வைத்து செய்யவில்லை.. இடைத்தேர்தலில் 8 தொகுதியையாவது ஜெயித்து மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலும் அதிமுக உள்ளது. அதனால் பணத்தை காட்டி முக்கிய நிர்வாகிகளை வளைத்து போட்டுவிட்டால், அந்த தொகுதியில் அதிமுக ஈஸியாக ஜெயிக்க முடியும் என்று கணக்கு போடுகிறதாம்.

    எச்.ராஜா

    எச்.ராஜா

    இதுவாவது பரவாயில்லை.. தங்கள் கட்சி ஜெயிப்பதற்காக இதை செய்கிறார்கள் என்று சொல்லலாம். ஆனால் சிவகங்கையில் அப்படி இல்லை... எச்.ராஜாவை நிறுத்தியதால் கடும் அதிருப்தியில் அதிமுக உள்ளதாம். ஏனென்றால் இதிலும் தினகரன் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு தேர்போகி பாண்டி என்பவரை நிறுத்தி உள்ளார். இவரை வேட்பாளராக நிறுத்த காரணம் முக்குலத்தோர் சமூகம் அங்கு கணிசமாக உள்ளது. அவர்களின் ஓட்டை எளிதாக பெறவே தினகரன் எடுத்த அதிரடி இது.

    கடுப்பில் அதிமுக

    கடுப்பில் அதிமுக

    ஆனால் எச்.ராஜாவுக்கோ அவர் சார்ந்த சமூக ஓட்டுக்கள் அங்கு குறைவுதான். இது தெரிந்தும் சீட் தந்து விட்டதால்தான் தொகுதியில் அதிமுகவினர் கடுப்பாகி உள்ளனர். இதை புரிந்து கொண்ட அமமுக தரப்போ, ஒருசில அதிமுக நிர்வாகிகளை சந்தித்து தங்களை ஆதரிக்கும்படியும், அதற்கு தேவையானவற்றை செய்கிறோம் என்றும் உறுதி சொல்கிறதாம்!

    English summary
    In some constituencies the AMMK is said to be more likely to win. Thus, the ADMK candidates are said to have a secret deal with AMMK
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X