சென்னை புறநகர் ரயில்களில் போறவங்களா நீங்க.. புதிதாக அறிமுகமான புதிய வசதி.. செம்ம!
சென்னை: UTS Mobile App மூலம் முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகள், சீசன், நடைமேடை டிக்கெட்டுகளை இப்போது எடுப்பது இன்னும் எளிதாகி உள்ளது. ரயில் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து, 'ஜியோ-ஃபென்சிங்' வரம்புகள் இல்லாமல் டிக்கெட்டுகளை எடுக்க முடியும்.
காகிதப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், பயணிகள் டிக்கெட் வாங்குமிடத்தில் வரிசையில் நிற்பதை தவிர்க்கும் நோக்கத்திலும் UTS Mobile App உருவாக்கப்பட்டது.

புறநகர் ரயில்களில் பயணிப்பதற்காக ஆன்லைனில் டிக்கெட் எடுத்துக் கொள்ள இந்த யுடிஎஸ் திட்டம் கடந்த 2014-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத் நகரங்களில் புறநகர் ரயில்களில் டிக்கெட் எடுக்க மக்கள் யுடிஎஸ் ஆப்பை பயன்படுத்தி வருகிறார்கள். புறநகர் அல்லாத அனைத்து ரயில் நிலையங்களுக்கும் ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும்
இந்த யுடிஎஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி என்பதை பார்ப்போம்? இந்த யுடிஎஸ் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்ய வேண்டு.
அதில், நமது பெயர், பாலினம், பிறந்த தேதி, செல்லிடப்பேசி எண் உள்பட சில அடிப்படை தகவல்களை கொடுகக வேண்டும். செல்எண்ணை உறுதி செய்துகொள்வதற்காக ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய ஒடிபி எஸ்எம்எஸ் ஆக வரும்.
அதை பதிவு செய்த பிறகு, லாக்-இன் செய்வதற்கான யூசர் ஐடி, பாஸ்வேர்டு ஆகியவை வழங்கப்படும். ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டருக்கு செல்லாமல் ஒரே நேரத்தில் 4 டிக்கெட்டுகளை வாங்கலாம். நடைமேடைக்கு மட்டும் செல்வதற்கான டிக்கெட், மாதந்திர சலுகை பாஸ் ஆகியவையும் இந்தச் செயலியைப் பயன்படுத்தி வாங்கலாம்.

இந்நிலையில் இந்த செயலில் ஒரு குறை இருந்தது. புறநகர் ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்கும் போது, குறிப்பிட்ட மீட்டர் தூரத்தில் இருந்து தான் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று இருந்தது. அதற்கு மேல் போனால் டிக்கெட் எடுக்க முடியாத நிலை உள்ளது.இந்நிலையில் ரயில் நிலையங்களில் QR குறியீடு இப்போது நிறுவப்பட்டுள்ளது.இதன் மூலம், 'ஜியோ-ஃபென்சிங்' வரம்புகள் இல்லாமல் டிக்கெட்டுகளை எடுக்க முடியும். இதன் மூலம் ஸ்கேன் செய்து எளிதாக டிக்கெட் எடுக்க முடியும்.
அதேநேரம் புறநகர் ரயில்களில் குறிப்பிட்ட இடத்தில் இருந்து மட்டுமே டிக்கெட் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாட்டை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். சென்னையில் எத்தனை ரயில் நிலையங்களில் இந்த கியூஆர் கோடு ஸ்கேன் வசதி அறிமுகம் ஆகி உள்ளது என்பதை பாருங்கள். அதிலேயே எளிதாக டிக்கெட் எடுக்கலாம்.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம்












Click it and Unblock the Notifications