தமிழக அரசு ஊழியர்களுக்கு அடுத்த அதிர்ச்சி.. ஜுலை 2021 வரை அகவிலைப்படி உயர்வு இல்லை
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜுலை 2021 வரை அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு மாதத்திற்கு ஒருமுறை விலைவாசி ஏற்றம்- இறக்கத்தை அடிப்படையாகக் கொண்டு புள்ளியியல் அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகத்தில் ஆசிரியர்-அரசு ஊழியர்கள், ஓய்வூதிய தாரர்கள், குடும்ப ஓய்வூதிய தாரர்கள் உள்ளிட்ட 18 லட்சம் ஆசிரியர்- அரசு ஊழியர்கள் குடும்பங்கள் என மொத்தம் ஒன்றரைக் கோடிப் பேர் பயன் பெற்று வந்தார்கள்.

இந்நிலையில் அண்மையில் மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் அறிவித்த 4 சதவீத அகவிலைப்படி உயர்வை ரத்து செய்தது. அத்துடன் 2020 ஜனவரி மாதம், 2020 ஜுலை மாதம், 2021 ஜனவரி மாதம், 2021 ஜுலை மாதம் ஆகியவற்றுக்கான அகவிலைப்படி உயர்வை ரத்து செய்தது. இதே பாணியில் தமிழக அரசும் ஜனவரி மாதத்திற்காக உயர்த்தி அறிவித்த அகவிலைப்படி உயர்வை ரத்து செய்துள்ளது.
அத்துடன் ஜுலை 2021 வரை தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாது என்றும் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சம்பளம் ரத்து செய்து பிற்பகலில் தமிழக அரசு அறிவித்த நிலையில் இப்போது அடுத்த அதிரடியாக அகவிலைப்படி உயர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறை காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications