அந்தரங்க போட்டோக்களை வைத்து பிளாக் மெயில்? பார்வதி நாயருக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாக சுபாஷ் கைது
சென்னை: நடிகை பார்வதி நாயருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் பணியாளர் சுபாஷ் சந்திரபோஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
அபுதாபியில் மலையாள குடும்பத்தில் பிறந்தவர் பார்வதி நாயர், இவர் தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் சாப்ட்வேர் என்ஜீனியராக பணியாற்றியுள்ளார்.
இவர் நிமிர்ந்து நில் எனும் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார். இதைத் தொடர்ந்து என்னை அறிந்தால், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அடுக்குமாடி குடியிருப்பு
இவர் நுங்கம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவரது வீட்டில் புதுக்கோட்டையை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் பணியாளராக இருந்தார். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி தனது வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் ரூ9 லட்சம் மதிப்புள்ள வாட்ச்கள், ஒன்றரை லட்சம் மதிப்பிலான ஐபோன், ரூ 2 லட்சம் மதிப்பிலான லேப்டாப்பை திருடி சென்றதாக பார்வதி நாயர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

நுங்கம்பாக்கம் போலீஸார்
இந்த புகாருக்கு நுங்கம்பாக்கம் போலீஸார் ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி பார்வதி நாயரின் உதவியாளராக இருந்த சுபாஷ், நடிகை பார்வதி நாயர் தன்னை அடித்து துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

சுபாஷ் மீது புகார்
இந்த நிலையில் தான் கொடுத்த புகாரின் பேரில் சுபாஷ் மீது காலம்தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் பார்வதி நாயர் புகார் கொடுத்தார். மேலும் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது, தனது வீட்டில் பணிபுரிந்த சுபாஷ், தனக்கு தெரியாமல் தன்னை விதவிதமாக புகைப்படம் எடுத்துள்ளார்.

திருட்டு
அவர் ஒரு சைக்கோ. தன் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான பொருட்களையும் திருடிச் சென்றார் என கண்ணீர் பேட்டி அளித்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுபாஷ் மீண்டும் ஒரு புகாரை கொடுத்தார். அதில் நடிகை கொடுத்த புகாருக்கு மட்டும் தன் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தான் கொடுத்த புகாருக்கு நடிகை பார்வதி நாயரிடம் இன்னம் விசாரணை கூட நடத்தவில்லை என்றும் தெரிவித்தார்.

3 பிரிவுகளின் கீழ் வழக்கு
மேலும் பார்வதி நாயரின் வீட்டில் நடந்த பார்ட்டியில் தான் சில விஷயங்களை பார்த்துவிட்டதால் அதை நான் வெளியே சொல்லிவிடுவேனோ என்ற பயத்தில் பார்வதி நாயர் என் மீது பொய்யான புகாரை கொடுத்துள்ளார் என கூறி பரபரப்பை கிளப்பிய சுபாஷ், தனக்கு நடிகை கொலை மிரட்டலையும் விடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

கொலை மிரட்டல்
மேலும் பார்வதி நாயர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது. அதை எப்போது வேண்டுமானாலும் போலீஸில் காட்டி விடுவேன் என்றார். இந்த நிலையில் சுபாஷ் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக அவர் மீது பார்வதி நாயர் ஒரு புகாரை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ளார். அதன் பேரில் நுங்கம்பாக்கம் போலீஸார் சுபாஷ் மீது கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் இன்று சுபாஷை நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்தனர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications