தமிழக சட்டசபையில் 3வது நாள் கூட்டம் தொடங்கியது.. கேள்வி நேரத்தில் அமைச்சர்கள் பதில்!
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 3வது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. கேள்வி நேரத்தில் அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் கொடுமை தொடர்பாக விவாதிப்பதற்காக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தரப்பில் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (ஜனவரி 6) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபைக்கு வந்திருந்தார். ஆனால் சட்டப்பேரவை தொடங்கிய உடன் தேசிய கீதம் இசைக்கப்படாததால் ஆளுநர் ரவி உடனடியாக வெளியேறினார். இதனைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நேற்று 2வது நாளாக சட்டப்பேரவை கூடியது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன், மேல்மலையனூர் முன்னாள் எம்எல்ஏ ஆர்.தமிழ்மொழி ராஜதத்தன் ஆகியோர் மறைவுக்கு சட்டப்பேரவையில் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
அலுவல் ஆய்வுக்குழு முடிவின்படி, இன்று முதல் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறுகிறது. வரும் 10 ஆம் தேதி வரை இந்த விவாதம் நடைபெறும். இந்த கூடத்தொடரின் இறுதி நாளான 11 ஆம் தேதி, விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்க உள்ளார்.
இந்நிலையில், இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3வது நாள் கூட்டம் 9.30 மணிக்கு தொடங்கியது. திருக்குறள் வாசித்து அவையைத் தொடங்கினார் சபாநாயகர் அப்பாவு. அரவக்குறிச்சி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மு. ஜெகதீசன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இன்று சட்டப்பேரவைக்கு அதிமுக உறுப்பினர்கள் கறுப்புச் சட்டை அணிந்து வந்துள்ளனர். மேலும், டங்ஸ்டன் தடுப்போம்.. மேலூரைக் காப்போம்" என்ற வாசகம் கொண்ட முகக்கவசங்களை அணிந்துள்ளனர்.
சட்டப்பேரவையில் விவாதம் தொடங்கியுள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் கொடுமை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று ஒத்திவைப்பு தீர்மானத்துக்கான நோட்டீஸ் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தரப்பில் சபாநாயகர் அப்பாவு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, விசிக உள்ளிட்ட கட்சிகள் இது தொடர்பாக நோடடீஸ் வழங்கியுள்ளது குறி்ப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications