தமிழனின் தலையில் கடன் சுமை : எதற்காகக் கடன் வாங்கினார்கள்? என்ன செலவு? கேட்கிறார் கமல்ஹாசன்
எதற்காகக் கடன் வாங்கினார்கள்? என்ன விதத்தில் செலவு செய்தார்கள்? இத்தனை லட்சக்கணக்கான கோடிகளில் மக்களுக்கு ஓரிரு துளியேனும் சென்று சேர்ந்ததா? எதற்கேனும் கணக்கு உண்டா?
சென்னை: ஒவ்வொரு தமிழனின் தலையிலும் 65,000 ரூபாய் கடன் சுமை இருக்கிறது. எதற்காகக் கடன் வாங்கினார்கள்? என்ன விதத்தில் செலவு செய்தார்கள்? இத்தனை லட்சக்கணக்கான கோடிகளில் மக்களுக்கு ஓரிரு துளியேனும் சென்று சேர்ந்ததா? எதற்கேனும் கணக்கு உண்டா? என்று மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டசபையில் 22ஆம் தேதியன்று பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம், 2021-2022-ஆம் ஆண்டு மாநில கடன் சுமார் 5.7 லட்சம் கோடி ரூபாயாக இருக்க வாய்ப்பிருக்கிறது என தெரிவித்தார்.

இது தமிழக மக்களை தொகை அடிப்படையில், ஒவ்வொருவரின் மீதும் தலா 65 ஆயிரம் ரூபாய் கடன் சுமை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்தார்.
இந்த கடன் சுமை குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று - தமிழக அரசு வாங்கியிருக்கும் கடன்களைப் பற்றிய வெள்ளை அறிக்கை வேண்டும் என்பது.
— Kamal Haasan (@ikamalhaasan) February 24, 2021
இப்போது அரசின் செய்திக் குறிப்பின்படியே, ஒவ்வொரு தமிழனின் தலையிலும் 65,000 ரூபாய் கடன் சுமை இருக்கிறது. (1/2)
மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று - தமிழக அரசு வாங்கியிருக்கும் கடன்களைப் பற்றிய வெள்ளை அறிக்கை வேண்டும் என்பது. இப்போது அரசின் செய்திக் குறிப்பின்படியே, ஒவ்வொரு தமிழனின் தலையிலும் 65,000 ரூபாய் கடன் சுமை இருக்கிறது என்று கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எதற்காகக் கடன் வாங்கினார்கள்? என்ன விதத்தில் செலவு செய்தார்கள்? இத்தனை லட்சக்கணக்கான கோடிகளில் மக்களுக்கு ஓரிரு துளியேனும் சென்று சேர்ந்ததா? எதற்கேனும் கணக்கு உண்டா?
— Kamal Haasan (@ikamalhaasan) February 24, 2021
தேர்தலுக்கு முன்னதாக இக்கடன்களைப் பற்றிய முழுமையான அறிக்கை வந்தே தீரவேண்டும். (2/2)
எதற்காகக் கடன் வாங்கினார்கள்? என்ன விதத்தில் செலவு செய்தார்கள்? இத்தனை லட்சக்கணக்கான கோடிகளில் மக்களுக்கு ஓரிரு துளியேனும் சென்று சேர்ந்ததா? எதற்கேனும் கணக்கு உண்டா? . தேர்தலுக்கு முன்னதாக இக்கடன்களைப் பற்றிய முழுமையான அறிக்கை வந்தே தீரவேண்டும் என்றும் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications