"என்ன பேச்சு இது? ஏன் இப்படி?".. முதல் நாள் பிரஸ் மீட்டிலேயே சிக்கிய குஷ்பு.. கொந்தளித்த டிசம்பர் 3!
குஷ்புவின் கருத்துக்கு டிசம்பர் 3 இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது
சென்னை: பிளைட்டில் வந்து இறங்கிய முதல்நாளே குஷ்பு பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பி வருகிறது.. இது சம்பந்தமான விவாதங்களும் சோஷியல் மீடியாவில் ஆரம்பித்துள்ளன.
நேற்று டெல்லியில் பாஜக தலைவர்கள் முன்னிலையில் குஷ்பு இணைந்த நிலையில், இன்று சென்னை வந்தார். அப்போது அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, 'காங்கிரஸில் சுதந்திரமாக பேசக்கூட அனுமதி இல்லையென்றால் அந்த கட்சி எப்படி நாட்டிற்கு நல்லது செய்யும்? சிந்திக்கக் கூடிய மூளை வளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ்"என்று கடுமையாக விமர்சித்தார்.
குஷ்பு இவ்வாறு மனவளர்ச்சி குன்றியவர்களை இழிவுபடுத்தி பேசியதற்கு "டிசம்பர் 3 இயக்கம்" தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.. இதுகுறித்து ஒன் இந்தியா தமிழுக்கு டிசம்பர் 3 இயக்கத்தின் தீபக் அளித்த பேட்டியில் சொன்னதாவது:
ஒரு கட்சியை சார்ந்தவர்கள் இன்னொரு கட்சியை விமர்சிக்கலாம்.. அது தவறில்லை.. ஆனால், மூளை வளர்ச்சியின்மை தன்மையை பயன்படுத்தி குஷ்பு விமர்சித்துள்ளது தவறு.. அதை கடுமையாக எதிர்க்கிறோம்.. ஏனென்றால், பிறக்கும் 69 குழந்தைகளில் ஒரு குழந்தை மூளைவளர்ச்சி குறைவாக இருப்பது இயற்கை... அப்படி பிறக்கும் குழந்தைகள் எந்த வகையில் சிறுமை?
இயலாமை இயற்கையின் அங்கம்.. இதுக்காக அரசியல் எதிரியை விமர்சிப்பது முறையா? இயற்கையிலேயே ஆண்கள், பெண்கள் போலவே மாற்று திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியவர்கள் பிறக்கிறார்கள்.. அவர்களை கொண்டுபோய், உதாரணத்திற்கு பயன்படுத்துவதா? காங்கிரஸ் கட்சி இவருக்கு பிடிக்கவில்லையென்றால், மனவளர்ச்சி குன்றியவர்களுடன் ஒப்பிட கூடாது..
நாளைக்கு அந்த பிள்ளைகளுக்கே தெரியவந்தால், அவர்கள் எவ்வளவு வருத்தப்படுவார்கள்? இந்த பிள்ளைகளை பெற்ற தாய்மார்கள் எவ்வளவு பாடுபடுவார்கள்? நீங்களே பெரியாரை ஏத்துக்கறேன்னு சொல்றீங்க.. மானமும் அறிவும் மனிதனுக்கு அழகுன்னுதான் பெரியார் சொல்றார்? அதுவும் இல்லாமல் குஷ்பு பேசியது சட்டப்படி தப்பும்கூட.
இப்படித்தான் ஒருமுறை ராதாரவி மனவளர்ச்சி குன்றியவர்களை பற்றி பேசினார்.. இப்போ இவங்க பேசியிருக்காங்க.. இதுவா அரசியல் நாகரீகம்? அதனால் குஷ்பு தான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு தெரிவிக்கணும்.. மாற்று திறனாளிகளுக்கு கட்சியையே கிண்டல் அடிச்சாலும் தவறுதான்.. ஒரு தனிநபரை கிண்டல் அடிச்சாலும் தவறுதான்.. அதனால் கண்டிப்பாக அவர் வருத்தம் சொல்லியே ஆக வேண்டும்" என்றார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
குஷ்பு மாப்பிள்ளை இவரா? அந்த போட்டோவை எடுத்து போட்டு அலப்பறை! ஜெ.தீபா கணவர் மாதவன் வரை போய்ட்டாங்களே -
Kushbu: மகள் அவந்திகாவுக்கு திருமணம்! பிரதமருக்கு அழைப்பு விடுத்த குஷ்பு- சுந்தர்.சி! மாப்பிள்ளை யார்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications