மீனவர்கள் நலனுக்காக தனி அமைச்சரவை தேவை.. ஒத்திவைப்பு தீர்மானம் முன்மொழிந்த விஜய் வசந்த்
சென்னை: மீனவர்களின் நலன் மற்றும் மீன்வள துறையை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் தனியாக ஒரு அமைச்சரவை தேவை என கோரி நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை முன்மொழிந்தார் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்.
மீனவர்கள் இன்று பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறார்கள். கடலில் மீன்பிடிக்க செல்லும் போது ஏற்படும் விபத்துக்கள், வேறு நாட்டு அரசுகள் மீனவர்கள் மீது நடத்தும் தாக்குதல்கள், புயல் மற்றும் பெருங் காற்றினால் ஏற்படும் உயிர் மற்றும் பொருளாதார இழப்புகள் ஏராளம். இலங்கை, பாகிஸ்தான் போன்ற வெளிநாட்டு சிறைகளில் நமது மீனவர்கள் அல்லல்படுகின்றனர். தற்போது 211 இந்திய மீனவர்கள் மற்றும் 1172 படகுகள் பாகிஸ்தான் நாட்டிலும், 141 மீனவர்கள் மற்றும் 198 படகுகள் இலங்கையிலும், 95 மீனவர்கள் வங்கதேசத்திலும் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் கடலரிப்பு போன்ற இயற்கை சீற்றங்களால் கடலோர கிராமங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. கடலில் குறைந்து வரும் கடல் வளங்கள் காரணமாக மீன்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. இந்தியாவில் 7516 கி.மீ தூரத்திற்கு கடற்கரையும் அதில் சுமார் 3 கோடி மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் நலனை பாதுகாக்கவும், மீன் வளத்தை பெருக்கவும் உதவும் வகையில் மத்திய அரசு மீனவர் நலன் மற்றும் மீன்வள துறைக்கென தனி அமைச்சரகம் உருவாக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications