ஒரே நாளில் ரூ.217 கோடி.. பத்திரப்பதிவு வரலாற்றில் வசூல் சாதனை.. 26,000 ஆவணங்கள்.. சபாஷ் தமிழக அரசு
சென்னை: பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், பல்வேறு அறிவிப்புகளையும், சலுகைகளையும் பத்திரப்பதிவு வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், ஒரு மகிழ்ச்சியான செய்தியை பதிவுத்துறை தற்போது வெளியிட்டிருக்கிறது.
தமிழக அரசின் மற்ற துறைகளை போலவே பத்திரப்பதிவு துறையும் முழுக்க முழுக்க ஆன்லைன்மயமாகிவிட்டது.. அதேபோல, ஒவ்வொரு வருடமும் வருவாய் இலக்கு நிர்ணயித்து, பத்திரப்பதிவு துறை செயல்பட்டு வருகிறது.

சுபமுகூர்த்த தினம்: அந்தவகையில், இந்த வருடம் இதுவரை ரூ.8,000 கோடி கூடுதல் வருவாய் பத்திரப்பதிவுத் துறையில் கிடைத்துள்ளது. ஆனால், நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ ரூ.25,000 கோடி வருவாய் ஆகும்.. எனவே, இந்த இலக்கை எட்டி பயணப்பட்டு வருகிறது. இதற்காகவே, பல்வேறு அதிரடிகளையும், அறிவிப்புகளையும், வெளியிட்டு வருவதுடன், பொதுமக்களுக்கான சலுகைகளையும் வாரி வழங்கி வருகிறது.
அதன் ஒருபகுதியாக, சுபமுகூர்த்த தினங்களில் சார்பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்த நாட்களில் மட்டும், பத்திரப்பதிவு சற்று அதிகமாகவே நடக்கும் என்பதால், கூடுதல் வசூல் கிடைத்து வருகிறது..
விடுமுறை நாட்கள்: அதேபோலவே, சில விடுமுறை நாட்களிலும் கூடுதல் பத்திரப்பதிவை மேற்கொள்ள மக்கள் கோரிக்கை விடுத்து வந்ததால், அதற்கேற்றபடியும் விசேஷ டோக்கன்கள் கூடுதலாக விநியோகிக்கப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த தை மாதம், பதிவுத்துறை முக்கிய சலுகை ஒன்றை வெளியிட்டிருந்தது. தை மாதம் என்பதால், பத்திரப்பதிவு அதிகம் நடக்கக்கூடும் என்பதால், இந்த மாதம் முழுவதும் கூடுதல் டோக்கன்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டிருப்பதாக, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் தெரிவித்திருந்தார்.
ஆவணப்பதிவுகள்: அதில், ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும், அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்படும் என தகவல் வெளியாகியிருந்தது.
பொங்கலுக்குப்பிறகு ஜனவரி 31 வரை அனைத்து வேலை நாட்களிலும் பத்திரப் பதிவுக்கான டோக்கன்களை கூடுதலாக வழங்க உத்தரவிடப்பட்ட நிலையில், ஆவணப்பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மகிழ்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, பதிவுத்துறை தலைவர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உள்ளதாவது:
கூடுதல் டோக்கன்கள்: "ஜனவரி 31-ம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் கூடுதலான டோக்கன் வழங்க உத்தரவிடப்பட்டது. கடந்த 22ம் தேதி மட்டும் 21,004 பத்திரங்கள் பதியப்பட்டு அதன் மூலம் அரசுக்கு ரூ.168.83 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.
புதிய கூட்டு வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் ஜனவரி 22-ம் தேதி சென்னையில் பதியப்பட்ட 137 அடுக்குமாடி குடியிருப்பு பதிவுகளும் அதன்மூலம் பெறப்பட்ட ரூ.12 கோடி வருவாயும் இதில் அடங்கும். இனி வரும் நாட்களிலும் பதிவுகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று பதிவுத்துறை சார்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.
வசூல் சாதனை: அதன்படியே, பதிவுத்துறை, சார்பதிவாளர் அலுவலகங்களில் நேற்று ஒரே நாளில் ரூ.217 கோடி வருவாய் ஈட்டி புதிய சாதனை படைத்துள்ளது என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி தகவல் தெரிவித்துள்ளார். சார்பதிவாளர் அலுவலகங்களில் நேற்று மட்டுமே 26,000 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், இது பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வசூல் படைத்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications