தீபாவளி விடுமுறை : மெகா தடுப்பூசி முகாம் ரத்து - வீடு வீடாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்
மெகா தடுப்பூசி முகாம் இந்த வாரம் ரத்து செய்யப்பட்டாலும் வீடு வீடாக தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் நாளை நடைபெற இருந்த 8வது கொரோனா தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து நாளை நடைபெற இருந்த தடுப்பூசி மூகாம் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மெகா தடுப்பூசி முகாம் இந்த வாரம் ரத்து செய்யப்பட்டாலும் வீடு வீடாக தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கிய 9 மாதங்கள் ஆன நிலையில் இதுவரை 100 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளன. தமிழகத்திலும் தடுப்பூசி போடும் பணி மிக துரிதமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போட வசதியாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கூடுதலாக மையங்கள் அமைத்து மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 7 வாரமாக 7 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி 28.91 லட்சம் பேருக்கும், 19 ஆம் தேதி 16.43 லட்சம் பேருக்கும், 26 ஆம் தேதி 25.04 லட்சம் பேருக்கும், அக்டோபர் 3 ஆம் தேதி 17.04 லட்சம் பேருக்கும், கடந்த 10 ஆம் தேதி 22.85 லட்சம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கடந்த 23 ஆம் தேதி 22.33 லட்சம் பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 7 மெகா தடுப்பூசி முகாம்களில் ஒரு கோடியே 57 லட்சத்து 13 ஆயிரத்து 382 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை 8வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், சுமார் 50 ஆயிரம் முகாம்கள் மூலம் தடுப்பூசி போடும் பணி ஞாயிறன்று எட்டாவது தடுப்பூசி முகாம் மூலம் நடைபெற உள்ளதாக தெரிவித்திருந்தார். 2வது தவணை கோவாக்சின் தடுப்பூசி 13 லட்சம் பேருக்கும், கோவிஷீல்டு தடுப்பூசி 48 லட்சம் பேருக்கும் செலுத்தப்பட உள்ளதாகவும், அதைத்தொடர்ந்து தொடர்ந்து 8வது வரமாக தடுப்பு முகாம்கள் நடைபெற்றாலும் இன்னும் தடுப்பூசி போடவேண்டியவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நாளை நடைபெற இருந்த மெகா தடுப்பூசி முகாம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. மெகா தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டிருந்தாலும் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு தேடி சென்று தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு காரணமாக 16 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதாகவும் இதன் காரணமாக அந்த மாவட்டங்களில் முகாம்கள் அமைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தற்போது தீபாவளி பண்டிகையாக இருப்பதால் சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு பணியாளர்கள் விடுமுறை எடுத்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாகவும் இந்த சமயத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தினால் அவர்கள் விடுமுறையை ரத்து செய்துவிட்டு வேலைக்கு வரும் சூழல் உருவாகும் என்றும் இது அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்த அதிகாரி, இதை எல்லாம் கருத்தில் கொண்டு மெகா தடுப்பூசி முகாமை நாளை நடத்துவதற்கு பதில் அடுத்தவாரம் நடத்த அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
மெகா தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டிருந்தாலும் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு தேடி சென்று தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை












Click it and Unblock the Notifications