தீபாவளி கொண்டாட தயாராகும் மக்கள் - சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்

தீபாவளியை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு இன்று முதல் வரும் 3ம் தேதி வரை மொத்தம் 16,540 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னையில் 6 இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நவம்பர் 5 முதல் 8ம் தேதி வரை சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 4ஆம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. பண்டிகை கால விடுமுறையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.

சென்னையில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு 16,540 பேருந்துகளும், சொந்த ஊர்களில் இருந்து திரும்பி வர 17,719 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

இன்று முதல்

இன்று முதல்

நவம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை மொத்தம் 16,540 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் நவம்பர் 5 முதல் 8ம் தேதி வரை மொத்தம் 17,719 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் போக்குவரத்துறை அறிவித்துள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் 6 இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தென் மாவட்ட பேருந்துகள்

தென் மாவட்ட பேருந்துகள்

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, அரியலூர், திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

தாம்பரம் மெப்ஸ்

தாம்பரம் மெப்ஸ்

தாம்பரம் மெப்ஸ் அண்ணா பேருந்து நிலையம் - திண்டிவனம், விக்ரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் ஜி.எஸ்.டி சாலை வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    நெருங்கியது தீபாவளி… புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க குவிந்த மக்கள்…!
    ஜிஎஸ்டி சாலை வழியாக

    ஜிஎஸ்டி சாலை வழியாக

    தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, போளூர், வந்தவாசி, செஞ்சி, பண்ருட்டி, நெய்வேலி, கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பேருந்துகள் ஜி.எஸ்.டி சாலை வழியாக இயக்கப்படும்.

    பாண்டிச்சேரி

    பாண்டிச்சேரி

    கே.கே நகர் மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கத்திப்பாரா பாலம் எஸ்.பி.படேல் ரோடு கிழக்கு கடற்கரை சாலை வழியாக இயக்கப்படும்.

    காஞ்சிபுரம், வேலூர் திருப்பதி

    காஞ்சிபுரம், வேலூர் திருப்பதி

    பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து ஆரணி, வேலூர்,ஆற்காடு,திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

    ஆந்திரா பேருந்துகள்

    ஆந்திரா பேருந்துகள்

    மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் பொன்னேரி, கும்மிடிபூண்டி, ஊத்துக்கோட்டை வழியாக இயக்கப்படும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+