தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு.. தமிழக அரசு மிக முக்கிய அறிவுரை.. நோட் பண்ணுங்க
சென்னை: அரசுப்பேருந்துகளில் 69% இருக்கைகள் உள்ளன; தீபாவளி கூட்டத்தை தவிர்க்க முன்பதிவு செய்வீர் என்று பொதுமக்களுக்கு போக்குவரத்துத்துறைச் செயலாளர் பனீந்திர ரெட்டி அறிவுரை வழங்கி உள்ளார்.
அதன்படி.. தீபாவளிக்கு அரசு பேருந்துகளில் 31% இருக்கைகளே முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. 69% இருக்கைகள் காலியாக உள்ளன. இதனால் இப்போது புக் செய்தால் இடங்கள் எளிதாக கிடைக்கும். எனவே தீபாவளி கூட்டத்தை தவிர்க்க அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து கொள்ளுங்கள் என்று பொதுமக்களுக்கு போக்குவரத்துத்துறைச் செயலாளர் பனீந்திர ரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

கிளாம்பாக்கத்தில் பேருந்து ஏற விரும்புபவர்கள்.. பின்வரும் மார்க்கத்தில் பயணிக்கலாம். திருச்சி, கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், காரைக்குடி, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், பொள்ளாச்சி, ராமேஸ்வரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், திண்டிவனம், விழுப்புரம், திருக்கோவிலூர், விருத்தாச்சலம், அரியலூர், திட்டக்குடி, செந்துறை, ஜெயங்கொண்டம், போளூர், வந்தவாசி மற்றும் திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள் திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்கமாக பட்டுக்கோட்டை மன்னார்குடி செல்லும் அனைத்து வழித்தட பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும்.
பேருந்துகளில் வெடிகளுக்கு அனுமதி இல்லை. ரயிலில் செல்ல விரும்புபவர்களுக்கு வெடிகள் எடுத்து செல்ல அனுமதி இல்லை. பயணிகள் பேருந்து நிலையத்திலிருந்து 28/10/2024 முதல் 30/10/2024 வரை ஆகிய நாட்களில் பயணம் மேற்கொள்ளும்படிகேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், 30/10/2024 கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்த்து 27/10/2024 மற்றும் 28/10/2024 ஆகிய நாட்களில் தங்கள் பயணத்தை செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பல லட்சம் பேர் வீடுகளுக்கு செல்ல உள்ளதால்.. மக்கள் முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தீபாவளிக்கு கார் மற்றும் இதர வாகனங்களில் செல்பவர்கள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக திருப்போரூர் - செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்றுச்சாலை வழியாக செல்லலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தி உள்ளார்.
பேருந்துகளில் செல்ல விரும்புவோருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 28/10/2024, 29/10/2024 மற்றும் 30/10/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படுகின்ற 2,092 பேருந்துகளுடன், 4,900 சிறப்பு பேருந்துகள் என மூன்று நாட்களும் சேர்த்து 11,176 பேருந்துகளும் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 2,910 சிறப்பு பேருந்துகளும் ஆக ஒட்டு மொத்தமாக 14,086 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தீபாவளியை முன்னிட்டு, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏழு சுங்கச்சாவடிகளில் உள்ள பூம் தடுப்புகளை NHAI அகற்றி உள்ளது. போக்குவரத்தை எளிதாக்கும் முடிவில் இந்த தடுப்புகள் அகற்றப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கையானது காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வாகனத்தின் அளவு வழக்கமான 35,000 இலிருந்து தினசரி 50,000 ஆக உயரும். இதனால் பூம் அகற்றப்பட்டு உள்ளது. ஆனால் வழக்கம் போல் டோல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று NHAI தெளிவுபடுத்தியுள்ளது.
தீபாவளிக்கு முன்னதாக ஆயிரக்கணக்கான மக்கள் சென்னைக்கு வெளியே செல்வதால் தாம்பரம், செங்கல்பட்டு, ஈசிஆர் சாலை கடுமையான போக்குவரத்து நெரிசலால் திணறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்லா வருடமும்.. எல்லா பண்டிகை தினங்களுக்கும் நடப்பது போலவே.. இந்த முறையும் சென்னையை இணைக்கும் சாலைகள் மூச்சுத்திணறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4 நாட்களில் தீபாவளி பண்டிகை நடப்பதால் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications