சென்னை ஸ்டார் ஓட்டலில் தொழிலதிபருக்கே அல்வா தந்த தீபிகா.. காதலனுக்கு பைக் வாங்க ஆசை.. கடைசியில் கம்பி
சென்னை: சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொழில் அதிபருடன் இரவு முழுக்க தங்கிய தீபிகா என்ற இளம்பெண் நள்ளிரவில் செய்த செயல் அவரை சிறையில் தள்ளியுள்ளது. போதையில் மயங்கி தூங்கிய தொழில் அதிபரின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு இரவோடு இரவாக தப்பிச்சென்ற தீபிகாவை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகின. பல ஆண்களை இதே பாணியில் ஏமாற்றி பணம் பறித்ததாகவும், இப்போது தான் மாட்டிவிட்டேன் என்றும் தீபிகா கூறியிருக்கிறார்.
சென்னையில் ஹோட்டலில் தொழிலதிபருடன் இரவு முழுக்க தங்கிவிட்டு காலையில் நகையுடன் எஸ்கேப் ஆன இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்ட தகவல்கள் வருமாறு:-

யாருக்கும் தெரியாமல் எஸ்கேப்
சென்னை ஆவடி அருகே உள்ள காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் மணி. 47 வயதான இவர் தொழில் அதிபர் ஆவார். சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் ரூம் எடுத்து தனது தோழி தீபிகாவுடன் மணி தங்கினார். இருவரும் இரவில் மது அருந்தியதாக சொல்லப்படுகிறது. இரவில் மது மயக்கத்தில் மணி உறங்கிய நிலையில், அவரது தோழியான தீபிகா காலையில் யாருக்கும் தெரியாமல் எஸ்கேப் ஆகியுள்ளார்.
தீபிகாவின் காதலனும் கைது
இரவு முழுக்க தங்கியிருந்தவரை திடீரென காணவில்லை என தேடிய மணிக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. தன்னுடைய 10 பவுன் தங்க சங்கிலியும் காணாமல் போயிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மணி புகார் கொடுத்திருந்தார். இதுதொடர்பாக தேனாம்பேட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடியதாக தீபிகாவை கைது செய்தனர்.
தீபிகாவிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், திருடிய தங்க சங்கிலியை தனது காதலன் சதிஷ்குமார் (வயது 24) உடன் சேர்ந்து ரூ.7 லட்சத்திற்கு விற்றது தெரியவந்தது. நகையை விற்று கிடைத்த பணத்தில் தனது காதலனுக்கு பைக் வாங்கி கொடுத்துளார். மீதமுள்ள பணத்தை செலவு செய்வதற்காக இருவரும் வைத்து இருந்துள்ளனர். இதையடுத்து, பணம் மற்றும் பைக், விற்பனை செய்யபப்ட்ட நகையையும் மீட்ட போலீசார், திருட்டுக்கு உதவியாக இருந்த காதலன் சதீஷ்குமாரையும் கைது செய்தனர்.
முதல் முறையாக மாட்டிக்கொண்டேன்
பின்னர் தீபிகாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளாராம். தீபிகா கூறியதாவது:- பெற்றோரை பிரிந்து தனியாக வாழும் எனக்கு 17 வயதில் திருமணம் ஆகிவிட்டது. கணவர் தற்போது உடன் இல்லை. 4 வயதில் ஒரு மகன் உள்ளான். எனக்கு ஏகப்பட்ட ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள். மணியை நான் ஹோட்டலில் சந்தித்தேன்.
ஒன்றாக மது அருந்தினோம். இரவில் போதை மயக்கத்தில் மணி மயங்கி விட்டார். இதுதான் சரியான சமயம் என நான் மணியிடம் இருந்த தங்க சங்கிலியை திருடிச்சென்றேன். எனது பாய் பிரண்டு பலரை இப்படி ஏமாற்றியிருக்கிறேன். யாரும் புகார் கொடுக்காததால் மாட்டாமல் இருந்தேன். ஆனால், தற்போது முதல் முறையாக மாட்டிக்கொண்டேன்' என்று கூறியிருக்கிறார். இந்த தகவலை போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஒழுக்கம் தவறினான் இது தான் நிலைமை
தீபிகாவையும் அவரது காதலன் சதீஷ்குமாரும் நீதிமன்றக்காவலில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தனக்கு திருமணம் ஆகவில்லை எனக் கூறி ஒவ்வொரு நபரிடம் பழகிய தீபிகா நகை, பணம் திருடி பல உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளார். ஒழுக்கம் தவறியதால் தற்போது இளம் வயதிலேயே சிறையில் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார் தீபிகா.
-
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை- காவல் துறை விளக்கம் -
கும்மிடிப்பூண்டி சிறுமியின் பெற்றோரை மிரட்டினாரா தவெக எம்எல்ஏ விஜயகுமார்? மாதர் சங்கத்தினர் புகார் -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு












Click it and Unblock the Notifications