தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை வெளியிடுவதில் தாமதம்.. 17C சரிபார்த்து அனுப்பாததால் லேட்?
சென்னை: தமிழக சட்டசபைத் தோ்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 17C படிவத்தில் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையுடன் மொத்தம் பதிவான வாக்குகளின் விவரங்களை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சரிபார்த்து அனுப்பாததால் தாமதம் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 23) நடைபெற்றது. வாக்குப்பதிவு தொடங்கியது. கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். 234 தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் பதிவான வாக்குகளின் சதவீதத்தை இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை தோ்தல் ஆணையம் 'ECI Net' செயலி மூலம் வெளியிட்டு வந்தது.

கடைசியாக 6 மணி நிலவரப்படி, தமிழகத்தில் 85.15 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்படது. அதேபோல், மாவட்ட வாரியாகவும், 234 தொகுதி வாரியாகவும் பதிவான வாக்குகளின் சதவீதத்தை தோ்தல் ஆணையம் வெளியிட்டது. ஆனால், பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை இரவு வரை அறிவிக்கவில்லை. இப்போதுதான் ஒவ்வொரு மாவட்டமாக, வாக்கு எண்ணிக்கை விவரங்கள் வெளியாகி வருகின்றன.
ஒவ்வொரு வாக்குச்சாவடியில் உள்ள மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை, பதிவான வாக்குகள், எத்தனை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய படிவம் 17 சி-யை அந்தந்த தொகுதிகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சரிபாா்த்து தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகத்துக்கு மாவட்ட வாரியாக அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். ஆனால், அந்த விவரம் வந்து சேராததால் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை அதிகாரப்பூா்வமாக அறிவிக்கவில்லை என்று தோ்தல் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவிகளும் வேட்பாளா்களின் பிரதிநிதிகள் மற்றும் மத்திய தோ்தல் பாா்வையாளா்கள் முன்னிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பாதுகாப்பு அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டதாக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.
ஸ்ட்ராங் ரூம் கண்காணிப்பு கேமரா ஒளிபரப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4 ஆம் தேதி வேட்பாளா்களின் பிரதிதிகள் முன்னிலையில் ஸ்ட்ராங் ரூம்கள் திறக்கப்படும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications