போலி ஆவணங்களை தடுக்க பத்திரப் பதிவுத் துறை அதிரடி.. பத்திர நகல்களில் இந்த விவரங்கள் இருக்காது
சென்னை: பதிவு செய்யப்பட்ட பத்திரங்களின் பிரதிகளை மூன்றாம் நபருக்கு வழங்கும் போது, ஆதார் உள்ளிட்ட அடையாள எண்களை அழித்து கொடுக்கும் பணியை பதிவுத்துறை தொடங்கியிருக்கிறது. போலி ஆவணங்கள் தயாரிப்பதை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கையை பதிவுத்துறை தொடங்கியுள்ளது. இது பற்றிய முழு விவரத்தை இங்கே பார்க்கலாம்.
சொத்து வாங்குவது விற்பது உள்ளிட்ட அனைத்திற்கும் ஆவணங்கள் பதிவு செய்யப்படுவது பதிவுத் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சார் பதிவாளர் அலுவலகம் வாயிலாக பதிவு செய்யப்படுகின்றன. பத்திரப்பதிவு பணிகள் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது போக பொதுமக்களின் பத்திரப்பதிவு துறையானது, பல்வேறு வசதிகளையும், அறிவிப்புகளையும் செய்து வருகிறது.

குறிப்பாக, தமிழகத்திலுள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகப் பணிகள் அனைத்தும் தற்போது ஆன்லைன் மயமாகிவிட்டதால், பத்திரப்பதிவிற்காக வரும் பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்க தேவையில்லை. இப்படி பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. சார்- பதிவாளர் அலுவலகத்தில் சொத்து விற்பனை பத்திரங்கள் பதிவு செய்யும் போது சம்பந்தப்பட்ட நபர்களின் அடையாளம் உறுதி செய்யப்படுகிறது.
இதற்காக சம்பந்தப்பட்ட நபரின் ஆதார், பான் எண் போன்றவை பெறப்படுவது வழக்கம். இந்த அடையாள சான்றுகளின் பிரதிகள் அனைத்தும் பத்திரத்தில் இணைக்கப்படும். இப்படி இணைக்கப்படும் அடையாள விவரங்கள் அனைத்தும் பத்திர பதிவு செய்த பிறகு, ஸ்கேன் செய்யப்படும். அப்படியே கம்ப்யூட்டரில் பதிவேற்றி விடுவார்கள். அதன்பிறகு அசல் பிரதி, சொத்து வாங்குபவர்களிடம் கொடுத்து விடுவார்கள். அதில் எந்த விபரங்களும் மறைக்கப்படாமல் முழுமையாக இருக்கும்.
அதேபோல, சொத்து வாங்கவோ, அது பற்றிய விவரத்தை தெரிந்து கொள்ளவோ யார் வேண்டும் என்றாலும் ஒரு சொத்தினுடைய பதிவு நகல்களை வாங்கும் வசதி இருக்கிறது. இதற்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு பத்திரங்களின் நகல்கள் பிடிஎப் - கோப்பாக மின்னஞ்சலில் அனுப்பப்படுகிறது. இந்த நகலில் சொத்து விற்பவர், வாங்குபவர் மற்றும் சாட்சிகள் ஆகியோரது ஆதார், பான் எண் போன்ற விவரங்கள் அழிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது.
இது தொடர்பாக பதிவுத்துறை அதிகாரி கூறுகையில், "ஆதார், பான் என் பொன்ற அடையாள எண்களுடன், பிரதி பத்திரங்கள் பெறும் தேர்டு பார்ட்டிக்கு கொடுக்கக்கூடாது என பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த விவரங்களுடன் கொடுத்தால் அது போலி ஆவணங்கள் தயாரிக்க வழி வகை செய்கிறது. பத்திரப்பதிவு செய்வோரின் தனிப்பட்ட தகவல்களை, தொடர்பு இல்லாத மூன்றாம் நபர்களுக்கு கொடுப்பதை தடுக்கும் விதமாக, பத்திரத்தில் இந்த விபரங்கள் அழிக்கப்பட்டு கொடுக்கப்படுகின்றன.
சொத்துக்களை வாங்கும் நபர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில், தங்கள் பத்திரத்தின் பிரதியை பெற்று, அதில் தனிப்பட்ட விபரங்கள் அழிக்கப்பட்டு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்" என்று கூறினர். பத்திரப் பதிவுத்துறையின் இந்த நடவடிக்கை சொத்து வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
ஏனெனில் சொத்துக்களை வாங்குபவர்கள் அதை பத்திரமாக பாதுகாப்பதே பெரிய விஷயமாக உள்ளது. எனவே, போலி ஆவணங்கள் தயாரிப்பதை தடுக்கும் விதமாக பதிவான பத்திரங்களின் பிரதிகளை வழங்கும் போது, ஆதார் உள்ளிட்ட அடையாள எண்களை அழித்து கொடுக்கும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி












Click it and Unblock the Notifications