அண்ணாமலை Vs பாஜக- அலசிப் பார்த்த டெல்லி ஆ! ஷாக்! அதிமுக கூட்டணியை உடைத்த பக்கா ஸ்கெட்ச்..நெக்ஸ்ட்?
சென்னை: அண்ணா திமுகவுடனான கூட்டணியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திட்டமிட்டே உடைத்திருப்பதால் டெல்லி பாஜக மேலிடம் கடும் அதிருப்தியில் இருப்பதாக சில ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு பாஜகவுடனான மோதல் சரியாகிடும்.. அண்ணா திமுகவுக்கு போக்கிடமும் இல்லை.. அதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் நீடிக்கும் என அசால்ட்டாக இருந்தது டெல்லி தலைமை. ஆனால் அண்ணா திமுகவோ, மீண்டும் மீண்டும் பாஜகவுடன் கூட்டணியே இல்லை என திட்டவட்டமாக கூறிவிட்டது.

அதிமுக பிடிவாதம்: 2024 லோக்சபா தேர்தலில் மட்டுமல்ல, 2026 சட்டசபை தேர்தலிலும் அதிமுக தனி கூட்டணிதான் அமைக்கும்; பாஜகவுடன் கூட்டணி இல்லை என நேற்று கூட அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கேபி முனுசாமி திட்டவட்டமாக கூறியிருந்தார். அதிமுகவுடனான மோதல், அதிமுக இறங்கி வராமல் இறுக்கமாக இருப்பது குறித்து மூத்த மத்திய அமைச்சர் ஒருவர் மூலமாக களநிலவர ரிப்போர்ட்டை கேட்டிருந்தது டெல்லி பாஜக மேலிடம். அத்துடன் பாஜகவுக்கு ஆதரவான 'அட்வைசர்கள்' மூலமாகவும் உண்மையான பின்னணியை குறித்து டெல்லி பாஜக மேலிடம் விசாரித்திருக்கிறதாம்.
திட்டமிட்டு வேட்டு வைத்த அண்ணாமலை?: இதில்தான், மார்ச் மாதம் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பதவியை ராஜினாமா செய்வேன் என பேசியதில் தொடங்கி அவரது ஒவ்வொரு நகர்வும் அதிமுகவை கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் வகையில்தான் இருந்தது என சுட்டிக்காட்டப்பட்டதாம். பாதயாத்திரை போகிறேன் என்ற பெயரில் தமக்கான செல்வாக்கை மட்டும் அரும்பாடு பட்டு வளர்க்க முயற்சிக்கும் அண்ணாமலை ஒவ்வொரு கூட்டத்திலும் ஏதாவது ஒன்றை பேசி பாஜக- அதிமுக கூட்டணிக்கு வேட்டுதான் வைத்து வந்ததையும் அந்த 'அட்வைசர்கள்' சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.
அண்ணாமலை மீது அதிருப்தி?: மேலும், தனித்து போட்டியிடும் பாஜகவுக்கு அதிமுகவில் உள்ள ஸ்லீப்பர் செல்கள்/ ஏக்நாத் ஷிண்டேக்கள் உதவியுடன் சில இடங்களைப் பெற்றுத் தந்து தமது இமேஜை உயர்த்திக் கொள்வது; அதன் மூலம் தமக்கான தனித்த செல்வாக்கை வளர்த்துக் கொள்வது என்கிற மறைமுக செயல் திட்டத்தை அரங்கேற்றுவதுதான் அண்ணாமலையின் அஜெண்டா எனவும் அட்வைசர்கள் டெல்லிக்கு பட்டவர்த்தனமான ரிப்போர்ட்டை கொடுத்தனராம். இதனால் தற்போது டெல்லி பாஜகவின் கோபம், அண்ணாமலை பக்கம் திரும்ப தொடங்கி இருக்கிறது என்கின்றன அந்த ஊடக தகவல்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications