இதுதான் சரியான நேரம்.. விஜயை முழு கண்ட்ரோலில் எடுக்கும் டெல்லி.. பிளான் எல்லாம் ரெடி.. என்ன ஆகுமோ?
சென்னை: தமிழ்நாடு அரசியலில் புதிய கூட்டணி அமைக்கும் சாத்தியக்கூறுகளை பாஜக ஆராய்ந்து வருகிறது. கரூர் விவகாரத்தில் விஜயை நேரடியாக கடுமையாக தாக்காமல் பாஜக மென்மையான போக்கை கடைப்பிடித்து வருகிறது. அதே சமயம் திமுக தரப்பையும் ஆளும் கட்சி என்பதால் பாஜக தாக்கி வருகிறது.
தமிழ்நாட்டில் தனது கால்தடத்தை வலுப்படுத்தும் நோக்கில், பாஜக அண்மையில் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்தது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து இரு கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளன. கடைசியாக டெல்லியில் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. விரைவில் இடப்பங்கீடு தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

பாஜக திட்டம்
ஆனால், இன்னொரு பக்கம் பாஜக, அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சத்தில் இருந்தது. செங்கோட்டையன் எடப்பாடியை எதிர்த்தது, அண்ணாமலை - நயினார் நாகேந்திரன் மோதல், ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் கூட்டணியில் இருந்து வெளியேறியது என்று பல விஷயங்கள் பாஜக - அதிமுக கூட்டணிக்கு எதிராக சென்றது.
இதனால் திமுக தலைமையிலான கூட்டணியை (காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் உட்பட) எதிர்கொண்டு ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் அளவுக்கு தற்போதைய என்டிஏ கூட்டணி அரசியல் பலம் பெற்றிருக்காது என பாஜக அஞ்சுகிறது.
மாநிலத்தின் அரசியல் நிலைமைகளை நன்கு அறிந்த ஒரு மூத்த பாஜக தலைவர் ஒருவர், "தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் வேறுபட்டது. கடந்த காலத்தில் அதிமுகவிற்கு ஒரு கவர்ச்சியான தலைமை இருந்தது. அது மறைந்த விஜயகாந்தின் தேமுதிக போன்ற ஒரு மூன்றாவது கட்சியின் எழுச்சியை மறைத்தது. ஆனால், இப்போது கட்சியை ஒன்றிணைக்க எந்த மக்கள் செல்வாக்குமிக்க தலைவரும் இல்லை. இதனால் விஜய் போன்ற ஒருவர் வந்தால் அது பாஜக கூட்டணிக்குத்தான் எதிராக மாறும். எதிர்க்கட்சி வாக்குகள் பிரியும். அது நிலைமையை மோசமாக்கும். அதிமுக வாக்கு வாங்கி குறையும்.
அதிமுகவின் வாக்கு சதவீதம் குறைந்தால், தவெக விரைவாக ஒரு மாற்று சக்தியாக உயரும் விஜய்யின் வயதும் அவருக்கு ஒரு சாதகமான அம்சம். அவருக்கு வெறும் 51 வயதுதான் ஆகிறது, அவருக்கு இன்னும் பல வருடங்கள் உள்ளன. இது அதிமுக - பாஜக கூட்டணிக்கு எதிராக மாறும். விஜய் இந்த கூட்டணிக்கு வந்தால் எல்லாம் சரியாகும், என்று குறிப்பிடுகிறார்.
விஜய்க்காக களமிறங்கும் பாஜக
இந்த நிலையில்தான் விஜய்க்கு சட்ட ரீதியாக பாஜக உதவும் என்கிறார்கள். கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, தமிழக பாஜக தலைவர்களான தமிழிசை சௌந்தரராஜன், நயினார் நாகேந்திரன் மற்றும் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கரூரில் முகாமிட்டனர். முன்னாள் மாநில பாஜக தலைவரான கே. அண்ணாமலை, தனது குடும்பத்துடன் இலங்கைக்குச் சென்ற தனிப்பட்ட பயணத்தை ரத்து செய்துவிட்டு, கூட்ட நெரிசல் நடந்த இடத்திற்கு விரைந்தார்.
கரூர் மாவட்ட பாஜக சார்பில் ஒவ்வொரு பாதிக்கப்பட்டவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்தார். ஒரு நாள் கழித்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கரூர் வந்து சேர்ந்தார்.
மத்திய பாஜக தலைமை, ஹேமா மாலினி மற்றும் அனுராக் தாக்கூர் போன்ற முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய என்.டி.ஏ உண்மை கண்டறியும் குழுவை அனுப்பியது. அனைத்து பாஜக தலைவர்களின் செய்தியும் ஒரே மாதிரியாக இருந்தது: இந்த துயரத்திற்கு மாநில காவல்துறை மற்றும் அரசே பொறுப்பு என்பது போல குற்றஞ்சாட்டி பேசி இருந்தனர். அவர் ஆய்விற்கு பிறகு கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் இயல்பானதாக தெரியவில்லை.
அங்கே நடந்தது சாதாரண விஷயம் போல தெரியவில்லை. ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய நிகழ்வு இது. இதில் எதோ அசாதாரணமான விஷயம் நடந்து உள்ளது. உள்நோக்கம் கொண்டு சிலர் செயல்பட்டது போல தெரிகிறது. உள்நோக்கத்தோடு சிலர் பணிகளை செய்து உள்ளனர் என்று நினைக்க தோன்றுகிறது என்று ஹேமமாலினி தெரிவித்துள்ளார். இதனால் கடந்த 48 மணி நேரமாக பாஜகவின் டாப் தலைகள் சிலர் விஜயுடன் நெருக்கமாக பேசி வருவதாக தகவல்கள் வருகின்றன. பாஜக கூட்டணியில் இருக்கும் நடிகர் ஒருவரும் விரைவில் விஜயுடன் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
விஜயுடன் நடக்கும் தீவிர உரையாடல்
ஏற்கனவே அரசியல் சாணக்கியர் ஒருவரிடம் விஜய் 3 மணி நேரம் பேசி இருந்தார். ஆளும் திமுக தரப்பு கரூர் வழக்கில் தீவிரமாக இருப்பதால்.. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பதற்றத்தோடு இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் இந்த வழக்கு விஜய்க்கு எதிராக திரும்பவே வாய்ப்புகள் அதிகம்.
ஏனென்றால் விஜய் தாமதமாக வந்தது, மற்ற மாவட்டங்களில் இருந்து கூட்டத்தை அழைத்து வந்தது, கூட்டத்தில் இங்கும் அங்கும் தாவியது, ஆம்புலன்ஸ் வந்த போது கூட விடாமல் பேசியது, ஜெனரேட்டர் அறையை உடைத்த தொண்டர்களை கண்டிக்காமல் போனது, மீட்பு பணிகளுக்கு கூட உதவாமல் போனது என்று விஜய் மீது நிறைய தவறுகள் உள்ளன. அவருக்கு எதிராக ஆதாரங்களும் உள்ளன. இதனால் பாஜக பக்கம் ஐக்கியம் ஆகி.. நிலைமையை சமாளிக்கலாமா என்று விஜய் நினைகிறாராம்.












Click it and Unblock the Notifications