டெல்லியில் முடியும் ஆம் ஆத்மி சகாப்தம்.. தாமரை மலருகிறது.. அடித்து சொல்லும் சாணக்கியா ஸ்ட்ராடஜி
சென்னை: டெல்லியில் கடும் போட்டிக்கு இடையே பாஜக ஆட்சியை பிடிக்கும், என்று சாணக்கியா ஸ்ட்ராடஜி நிறுவனம் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய எக்சிட் போலில் தகவல் வெளியாகி உள்ளது. 39-44 இடங்களில் பாஜக வெல்லும் என்று சாணக்கியா ஸ்ட்ராடஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சி 25-28 இடங்களில் வென்று கடும் போட்டியாக அமையும் என்று சாணக்கியா ஸ்ட்ராடஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் மொத்தமாக 70 இடங்கள் உள்ளது. இதற்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடந்தது.

அங்கே ஆட்சியை பிடிக்க 36 இடங்களில் வெல்ல வேண்டும். இந்த நிலையில் பெரும்பான்மைக்கு தேவையானதை விட கூடுதலாக.. அதாவது 39-44 இடங்களில் பாஜக வெல்லும் என்று சாணக்கியா ஸ்ட்ராடஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.
போட்டி கடுமை:
டெல்லியில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. ஆம் ஆத்மி - பாஜக - பாஜக இடையே போட்டி நிலவுகிறது. அதேபோல் சிபிஎம், சிபிஐ கட்சிகளும் தனியாக கூட்டணி அமைத்துள்ளனர். இந்த தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி தனித்து 70 இடங்களிலும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியும் தனித்து 70 இடங்களிலும் போட்டியிடுகிறது. பாஜக 68 இடங்களில் போட்டியிடுகிறது. பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் 1 இடத்திலும், லோக் ஜனசக்தி கட்சி 1 இடத்திலும் போட்டியிடுகிறது.
இந்த தேர்தலில் மகிளா சம்மன் யோஜனா என்ற பெயரில் ரூ.2100 மாதம் பெண்களுக்கு வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி வாக்குறுதி அளித்தது. பாஜக சார்பாக மகிளா சம்ரிதி யோஜனா என்ற பெயரில் பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பாக பெண்களுக்கு மாதம் ₹2500 நிதியுதவி வழங்கும் திட்டமான பியாரி திதி யோஜ்னா தொடங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.
ஆட்சி மாற்றம்: இதன் மூலம் 2013க்கு பின் முதல்முறையாக டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை இழக்கும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் 2013ல் இருந்து ஆம் ஆத்மியை தவிர வேறு கட்சி ஆண்டது இல்லை. இலவச மின்சாரம், ஊழலற்ற நிர்வாகம் என்று பல காரணங்களால்அந்த கட்சி ஆட்சியில் இருந்தது.
ஆனால் கடந்த சில மாதங்களாக முதல்வராக இருந்த கெஜ்ரிவால் கைது, துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கைது, அதிஷி முதல்வராக பதவி ஏற்பு என்று ஆம் ஆத்மி கட்சி கடுமையான ஆட்டம் கண்டது.
காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகள் எதுவும் அங்கே ஒரு இடம் கூட வெல்ல வாய்ப்பில்லை என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்று 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகள் காலை 7 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 6:30 மணிக்கு மூடப்படும். மாலை 6.30 மணிக்கு பின் தேர்தல் தொடர்பான எக்சிட் போல் கணிப்புகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில்தான் பாஜக கூட்டணியே ஆட்சியை பிடிக்கும்.. ஆம் ஆத்மி வெல்ல வாய்ப்பே இல்லை என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications