மத்திய அமைச்சராகிறார் ஜிகே வாசன்? பிரதமர் மோடி சந்திப்புக்கு பின் உற்சாகத்தில் தமாகா!

ஜிகே வாசன் மத்திய அமைச்சராகக் கூடும் என்கின்ற தமாகா வட்டாரங்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் மோடியுடனான டெல்லி சந்திப்புக்குப் பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் தலைகள் பெரும் உற்சாகத்தில் வலம் வருகின்றன. விரைவில் மத்திய அமைச்சராக ஜிகே வாசன் பதவியேற்க இருக்கிறார் என்பதுதான் இந்த உற்சாகத்துக்கு காரணம் என்கின்றன அந்த கட்சி வட்டாரங்கள்.

ஜிகே வாசன்.. அகில இந்திய காங்கிரஸில் தென்னாட்டு முகங்களில் ஒருவராக திகழ்ந்த ஜிகே மூப்பனாரின் மகன். தந்தை ஜிகே மூப்பனார் மறைவுக்குப் பின்னர் அரசியலில் பெரிதாக கோலோச்சவில்லை. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அமைச்சராக இருந்தார். 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்த நிலையில் அப்பா தொடங்கிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மீண்டும் தொடங்கினார் வாசன். ராகுல் காந்தியுடனான மோதலால் தமாகாவை வாசன் மீண்டும் தொடங்கினார்.

Delhi gives green signal to GK Vasan for Cabinet Birth?

2016-ம் ஆண்டு மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றது தமாகா. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் இருந்து தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அசைக்க முடியாத சிறு கட்சியாகவே இருந்து வருகிறது தமாகா. இதனாலேயே அதிமுக தயவில் ஜிகே வாசனை ராஜ்யசபா எம்பியாக்கியது பாஜக.

பாஜகவில் தமாகா ஐக்கியமாகிவிடும்; தமிழ்நாடு பாஜக தலைவராகவே ஜிகே வாசன் நியமிக்கப்படுவார் என்பது நீண்டகாலமாக பேசப்படுகிற செய்தி. ஆனாலும் இதனையெல்லாம் பொருட்படுத்தாமல் பாஜகவுடன் மிக நெருக்கமான உறவில்தான் இருந்து வருகிறார் ஜிகே வாசன். 2021 சட்டசபை தேர்தலில் 6 தொகுதிகளில் இரட்டை சிலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது. அப்போதும் பாஜகவில் ஜிகே வாசன் ஐக்கியமாவார் என கூறப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியை ஜிகே வாசன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு அரசியல் குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் விரைவில் மத்திய அமைச்சராவார் ஜிகே வாசன் என்கின்றன தமிழ் மாநில காங்கிரஸ் வட்டாரங்கள். டெல்லியில் பிரதமர் மோடியுடனான சந்திப்பில் இது தொடர்பாக உறுதி அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. விரைவில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறப் போகிறதாம்; அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறுவதால் கடைசி அமைச்சரவை விரிவாக்கமாக இருக்கக் கூடும்; ஆகையால் ஜிகே வாசனுக்கு டெல்லி மேலிடம் உறுதி தந்துவிட்டது என்பதுதான் தமாகா தகவல்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+