திமுகவுக்கு எதிரான பெரிய துருப்புச்சீட்டு.. மிஸ்ஸானது எப்படி.. கடும் குழப்பத்தில் டெல்லி உளவுத்துறை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜாபர் சாதிக் மற்றும் சலீம் ஆகியோருக்கு ஜாமீன் கிடைத்திருப்பதை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிர்ச்சியுடன் கவனித்திருக்கிறார்கள். இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு என்.ஐ.ஏ. தரப்பிலிருந்து நோட் போடப் பட்டுள்ளதாம். இந்த ஜாமீன் விவகாரம், மேல் மட்டங்களில் பல்வேறு விசாரணைக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடந்த வருடம் கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் சலீம் ஆகியோர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து, கடந்த 2024ம் ஆண்டு ஜூன் 26 தேதி கைது செய்தது. பின்னர் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.

மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருந்தது. அத்துடன், சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையும் கைது செய்திருந்தது. திஹார் சிறையில் இருந்த இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தது. அமலாக்கத்துறை வழக்கு நிலுவையில் இருந்ததால் ஜாமீன் கிடைக்காமல் இருந்ததால் இவர்கள் சிறையில் தொடர்ந்து இருக்க வேண்டியிருந்தது. இந்த நிலையில், அமலாக்கத்துறையின் வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தினை ஜாபரும் சலீம் அணுகியிருந்தனர். அந்த வழக்கில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் இவர்களுக்கு ஜாமீன் வழங்கியிருக்கிறது.

Delhi IB is confused about how ex DMK member Jaffer Sadiq gets bail in the case

இவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஜாமீன் விவகாரம் தான் தற்போது அமலாக்கத் துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமை ஆகிய தரப்புகளின் மேலதிகாரி ளிடம் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஜாபர் சாதிக் மற்றும் சலீம் ஆகியோருக்கு ஜாமீன் கிடைத்திருப்பதை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிர்ச்சியுடன் கவனித்திருக்கிறார்கள். இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு என்.ஐ.ஏ. தரப்பிலிருந்து நோட் போடப் பட்டுள்ளதாம்.

என்.ஐ.ஏ. தரப்பிலிருந்து நோட்

கஞ்சா கடத்தலில் ஒருவர் கைது செய்யப்பட்டாலே அவ்வளவு ஈசியாக ஜாமீன் கிடைக்காது. போதைப் பொருள் கடத்தலில் சம்மந்தப்பட்டிருந்தால் அதுவும் சர்வதேச நெட்வொர்க்கில் இருந்தால் ஆயுள் முழுவதும் ஜாமீன் கிடைக்காது. அப்படியிருக்கையில், ஜாபருக்கு எப்படி ஜாமீன் கிடைத்தது என்பதுதான் உயரதிகாரிகளுக்கு அதிர்ச்சி.

அதுவும் திமுகவுக்கு எதிரான துருப்புச்சீட் இந்த ஜாபர் சாதிக். அப்படிப்பட்ட ஒரு வழக்கில் ஜாபருக்கு எப்படி ஜாமீன் கிடைத்தது ? எந்த இடத்தில் அமலாக்கத்துறையும் போதைப்பொருள் தடுப்புத்துறையும் கோட்டை விட்டது ? என்று என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு கேள்வி எழுந்துள்ளதாம். இதனடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு நோட் அனுப்பி யுள்ளதாம்.

இதனையடுத்து, ஜாபர் விவகாரத்தில் அஜாக்கிரதையாக இருந்த அதிகாரிகள் தொடர்பான சில தகவல்கள் கிடைத்துள்ளதாம். அதாவது, திமுக அரசுக்கும் திமுக குடும்பத்துக்கும் நெருக்கமான ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி, போதைப் பொருள் தடுப்பு பிரிவில் இருப்பதும், அந்த அதிகாரிக்கு நெருக்கமான ஒருவரின் சகோதரர் ரா-வில் பணிபுரிவதும், திமுகவுக்கு நெருக்கமான இந்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் வட்டாரத்தின் உதவிகள் இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்டிருப்பதும் டெல்லிக்கு தெரியப்படுத்தப்பட்டிருப்பதாக போலீஸ் வட்டாரங்களில் சீக்ரெட்டாக பேசப்பட்டு வருகிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+