‛‛பீஸ் பீஸாக ஆக்கிவிடுவேன்’’.. பிரதமருக்கு மிரட்டல் விடுத்ததாக அமைச்சர் தாமோ அன்பரசன் மீது வழக்கு
சென்னை: பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்ததாக தமிழக அமைச்சர் தாமோ அன்பரசன் மீது டெல்லி போலீசார் 5 பிரிவுகளில் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் ஊரக தொழில்துறை அமைச்சராக இருப்பவர் தாமோ அன்பரன். இவர் சமீபத்தில் பிரதமர் மோடியை காட்டமாக விமர்சனம் செய்திருந்தார். சமீபத்தில் பிரதமர் மோடி தமிழகம் வந்த நிலையில் திமுகவை கடுமைாக விமர்சனம் செய்தார்.

அப்போது தமிழகத்தில் இருந்து திமுக விரைவில் காணாமல் போகும் என அவர் பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் தாமோ அன்பரசன் மேடையில் பேசினார்.
அப்போது அவர், ‛‛எவ்வளவோ பிரதமரை நான் பார்த்துள்ளேன். ஆனால் இவ்வளவு மட்டமாக பேசிய பிரதமரை நான் பார்த்து இல்லை. ஒழிச்சிடுவேன் என்று சொல்கிறார். நான் ஒன்றை ஒன்றை சொல்லி கொள்கிறேன். திமுக என்பது சாதாரண இயக்கம் இல்லை. பல பேர் உயிர் தியாகம் செய்து வளர்ந்த இயக்கம். யார் யாரோ ஒழிஞ்சிவிடும் என கூறினார்கள். ஆனால் அவர்கள் தான் ஒழிந்துபோய்விட்டனர். இந்த இயக்கம் அப்படியே தான் உள்ளது. நான் அமைச்சர் என்பதால் அடக்கி வாசிக்கிறேன். இல்லாவிட்டால் பீஸ் பீஸாக ஆக்கிவிடுவேன்'' என பேசினார்.
தாமோ அன்பரசனின் இந்த பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான அதிருப்தி அதிகரித்து வருகிறது. இதனால் திமுக அமைச்சர்கள் பிரதமர் மோடிக்க மிரட்டல் விடுக்கும் செயலில் இறங்குகின்றனர். பிரித்தாளும் அரசியல், ஊழல்,சர்வதேச போதைப்பொருள் வியாபாரிகளுடனான தொடர்பு உள்ளிட்டவற்றால் திமுக விரைவில் அரசியலில் இருந்து வெளியேறிவிடும்'' என தெரிவித்து இருந்தார்.
மேலும் தாமோ அன்பரசன் பேசிய வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் தான் பிரதமர் மோடிக்கு அமைச்சர் தாமோ அன்பரசன் கொலை மிரட்டல் விடுத்ததாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சய்சய் ரஞ்சன் சார்பில் டெல்லி போலீசில் புகார் செய்தார். மேலும் அவர் பேசிய வீடியோவும் ஆதாரமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த புகாரை தொடர்ந்து கொலை மிரட்டல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்பட 5 பிரிவுகளில் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். இதனால் அமைச்சர் தாமோ அன்பரசன் புதிய சிக்கலில் சிக்கி உள்ளார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications