சனாதன சர்ச்சை: உதயநிதி, பொன்முடி, ஆ.ராசா எம்.பி. மீது டெல்லி செம்ம கோபம்! ஏதோ பெருசா வெடிக்கும்?
சென்னை: சனாதன ஒழிப்பு சர்ச்சையில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கும் தமிழ்நாடு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பொன்முடி மற்றும் ஆ.ராசா எம்.பி. ஆகியோர் மீது டெல்லி செம்ம கோபத்தில் கொந்தளித்து போய் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உதயநிதி ஸ்டாலின்: சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு பங்கேற்றனர். இம்மாநாட்டில் சனாதனத்தை எதிர்க்கக் கூடாது; ஒழிக்க வேண்டும்; டெங்கு, மலேரியா, காலரா போல ஒழித்துவிட வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சுதான் வட இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரதமர் மோடியே, மத்திய அமைச்சரவையை கூட்டி சனாதனம் குறித்து பதிலடி தர உத்தரவிடும் அளவுக்கு நிலைமை படு சீரியசாகிவிட்டது. அதாவது அமைச்சர் உதயநிதியின் இந்தப் பேச்சை டெல்லி மத்திய அரசு கடும் கோபத்துடன் பார்க்கிறது என்பதையே இது காட்டி வருகிறது.

பொன்முடி: இதனைத் தொடர்ந்து மற்றொரு அமைச்சர் பொன்முடி, சனாதனத்தை எதிர்த்து உருவானதுதான் திராவிடர் இயக்கம் என வழக்கம் போல தமிழ்நாட்டில் பேசுகிற கருத்தைத்தான் கூறினார். ஆனால் அமலாக்கத்துறை உள்ளிட்டவைகளால் கடும் நெருக்கடியில் இருக்கும் அமைச்சர் பொன்முடியின் இந்த பேச்சையும் டெல்லி ரசிக்கவில்லை; கோபத்தை தூண்டும் வகையில் இருக்கிறது என அதிருப்தி காட்டியதாம். இதனையடுத்துதான் பொன்முடிக்கு எதிராகவும் இன்று மூத்த பாஜக தலைவர்கள் பெயரை குறிப்பிட்டே கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஆ.ராசா: முன்னாள் மத்திய அமைச்சரும் லோக்சபா எம்பியுமான ஆ.ராசா, உதயநிதிக்கு ஆதரவாக முழு வீச்சில் களம் கண்டவர். சனாதனத்தை தொழுநோய், ஹெச்.ஐ.வி. கிருமி, உலகை அச்சுறுத்தும் பயங்கரமான நோய் என தனக்கே உரித்தான கடுமையான சொற்களால், அம்பேத்கர் உள்ளிட்டோரது எழுத்துகளையும் பேச்சுகளையும் ஆதாரங்களை வைத்து விமர்சித்து கொண்டே இருக்கிறார். டெல்லியில் இருப்பவர்களுக்கும் பகிரங்க சவால் விடுத்தும் பேசிக் கொண்டிருக்கிறார். இதனையும் டெல்லி மேலிடம் ரசிக்கவில்லையாம். இதனையடுத்துதான் உதயநிதி, பொன்முடி, ஆ.ராசா படங்களுடன் வட இந்திய ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டு 'இந்தியாவுக்கு பேராபத்து' போலவும் ஆகப் பெரிய பயங்கர குற்றம் செய்தவர்கள் போலவும் விவாதங்களை நடத்தி கொண்டிருக்கின்றனர்.
நெருங்குது நெருக்கடி?: அதேநேரத்தில் இப்படி திமுக ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் டெல்லி அதிகார மையத்துடன் மல்லுக்கட்டுவது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம். வழக்குகளை எதிர்கொண்டிருக்கும் திமுக தலைவர்கள் மீது இத்தகைய பேச்சுகள் அவர்கள் மீதான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திவிடவும் வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் சீனியர் டெல்லி பத்திரிகையாளர்கள்.
ஏதோ ஒன்று நடக்கப் போகிறது!


Click it and Unblock the Notifications
