முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா... தேதி கேட்ட டெல்டா விவசாயிகள்..!
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை டெல்டா விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
நாட்டிலேயே முதல்முறையாக விவசாயத்திற்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்ததற்காகவும், மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காகவும் இந்த பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அவருக்கு நடத்தப்படவுள்ள முதல் பாராட்டு விழா இதுவாகும்.

தேர்தல் அறிக்கை
திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டது போல் வேளாண்மைத் துறைக்கென தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ததுடன் விவசாயிகளுக்கான ஏராளமான திட்டங்களையும் அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின். மேலும், ஒரு லட்சம் இலவச மின் இணைப்புகளை அடுத்த மூன்று மாதங்களுக்குள் விவசாயிகளுக்கு கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

தேதி கேட்டார்கள்
இந்நிலையில் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் இளங்கீரன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து பாராட்டு விழா நடத்துகிறோம், தேதி கொடுங்கள் எனக் கேட்டிருக்கிறார். தற்போதைய சூழலில் தனக்கிருக்கும் பரபரப்பான பணிகளை எடுத்துக்கூறிய முதலமைச்சர் ஸ்டாலின் வரும் ஜனவரி மாதத்தில் ஒரு நாள் தேதி கொடுக்கிறேன் என உறுதியளித்துள்ளார்.

தை மாதம்
தை மாதத்தில் எப்படியும் ஒரு நாள் தேதி கொடுத்துவிடுவார் முதலமைச்சர் ஸ்டாலின் என்ற நம்பிக்கையில், இப்போதே பாராட்டு விழாவுக்கான முன்னேற்பாடுகளை விவசாயிகள் சங்கத்தினர் தொடங்கிவிட்டனர். இந்த விழாவை டெல்டா பகுதி விவசாய சங்கத்தினர் நடத்தினாலும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளும் இதில் கலந்துகொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது.

எந்த ஊர்?
தஞ்சை அல்லது திருவாரூர் ஆகிய இரண்டு ஊர்களில் ஏதேனும் ஒரு ஊரில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடைபெறவுள்ளது. இதில் ஸ்டாலினுக்கு சிறப்புப் பட்டம் சூட்டவும் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் இளங்கீரன் விரும்புகிறார். கடந்த காலங்களில் முதலமைச்சர்களாக இருந்த ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கும் தஞ்சையில் விவசாயிகள் பாராட்டு விழா நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இந்த விழாவில் விவசாய சங்கங்கள் சார்பாக மேலும் சில முக்கியக் கோரிக்கைகள் முதலமைச்சரிடம் முன் வைக்கப்படும் எனத் தெரிகிறது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications