எம்புரான் படத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு ஏன்.. முல்லை பெரியாறு முதல் பஜ்ரங்கி வரை சர்ச்சை
சென்னை: இரண்டு ஷட்டரை திறந்தாலே, மக்கள பலிவாங்குற அணையை, அதாவது முல்லைப் பெரியாறு அணையை, குண்டு வைத்து தகர்த்தால், கேரளம் மறுபடியும் தண்ணீருக்குள் மூழ்கும். அணையை காப்பாற்ற செக் டேம் எனும் சுவர்களால் பயனில்லை. அணையே இல்லாமல் இருந்தால் தான் சரி என்பன போன்ற வசனங்கள் காரணமாக தமிழ்நாட்டில் எம்புரரான் திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால் நடித்து வெற்றி பெற்ற லூசிபர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் திரைப்படம் அண்மையில் வெளியாகியது., கேரளா, தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் வெளியாகி வசூல் ரீதியாக பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. வசூல் அதிகரிப்பதை போலவே பல்வேறு சர்ச்சைகளும் தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளன. குஜராத் கலவரம் மற்றும் அக்கலவரத்தில் தொடர்புடைய பஜ்ரங்கியின் பெயரும் எம்புரான் படத்தில் இடம் பெற்றிருந்தது.

இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்ததைத் தொடர்ந்து தயாரிப்பாளர் மோன் லால் வருத்தம் தெரிவித்ததுடன் 17 காட்சிகளையும் நீக்கியிருந்தார். பஜ்ரங்கியின் பெயரும் பால்ராஜாக மாற்றப்பட்டிருந்த. இந்நிலையில் எம்புரான் படத்திற்கு தமிழ்நாட்டில் விவசாய அமைப்புகளிடம் இருந்தும் அரசியல் கட்சிகளிடம் இருந்தும் தறபோது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நெடும்பள்ளி டேம் என்று மாற்று பெயரிட்டு, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குள் அடங்கி இருந்த திருவிதாங்கூர் ராஜா, 999 வருடங்களுக்கு இனாமாக எழுதிக் கொடுத்தாகவும். எழுதி வாங்கிய பிரிட்டிஷ்காரன் போய்விட்டது. மன்னராட்சியும் போய் விட்டதாம். ஆனாலும் அந்த ஆபத்து மக்களை காவு வாங்க காத்து நிற்பதாக நடிகை மஞ்சு வாரியர் பேசுவாக காட்சிகள் உள்ளது.
மேலும், இரண்டு ஷட்டரை திறந்தாலே, மக்கள பலிவாங்குற அணையை, அதாவது முல்லைப் பெரியாறு அணையை, குண்டு வைத்து தகர்த்தால், கேரளம் மறுபடியும் தண்ணீருக்குள் மூழ்கும். அணையை காப்பாற்ற செக் டேம் எனும் சுவர்களால் பயனில்லை. அணையே இல்லாமல் இருந்தால் தான் சரி என்பன போன்ற வசனங்களும் படத்தில் இடம் பெற்றிருப்பது கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது.
எம்புரான் திரைப்படத்தில், முல்லைப் பெரியாறு அணை குறித்து அவதூறான கருத்து தெரிவிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் பல கோரிக்கை வைத்துள்ளன. இதனிடையே எம்புரான் படத்தை வெளியிடும் திரையரங்குகளையும் மோகன்லால் பங்குதாரராக உள்ள கோகுலம் சிட்பண்ட் நிறுவனக் கிளைகளையும் முற்றுகையிட உள்ளதாக விவசாய அமைப்புகள் அதிரடியாக அறிவித்துள்ளன.
இதனிடையே, எம்புரான் பட சர்ச்சையில், தன் மகனை மட்டும் பலிகடா ஆக்க சிலர் முயல்வதாக பிருத்விராஜின் தாய் மல்லிகா வருத்தம் தெரிவித்துள்ளார். எம்புரான் படத்தின் கதையை இருவரும் ஒன்றாக அமர்ந்து படித்த பின்னர் காட்சியாக்கப்பட்டிருந்தது என்றும் ஆனால் படம் வெளியாகும் போது பிருத்விராஜ் மட்டும் எப்படி பொறுப்பாக முடியும்? என்றும் அவரது தாய் மல்லிகா கேள்வி எழுப்பியிருந்தார்.முன்னதாக சில வருடங்கள் முன்பு பிருத்விராஜ் பேட்டி ஒன்றில் முல்லை பெரியாறு குறித்து பேசியதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications