ரூ.1000 வருமா? உரிமைத்தொகை வராதா? இந்த ரூல்ஸ் உடனே மாற்றுங்க.. மீண்டும் கோட்டையை நெருக்கும் கோரிக்கை
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை தங்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை மீண்டும் முன்னெடுத்துள்ளனர் மாற்றுத்திறனாளிகள்.
கலைஞர் உரிமைத் தொகை கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி தொடங்கப்பட்டது. அது முதல் மாதந்தோறும் 15 ஆம் தேதி இந்த உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. கடந்த மாதம் தீபாவளி பண்டிகை 12ம் தேதி வந்ததால் அதற்கு முன்னரே உரிமைத் தொகை வழங்கப்பட்டிருந்தது.

புயல்: ஆனால், புயல் காரணமாக, இந்த மாதம் 15 ஆம் தேதி வரவு வைக்கப்படாது என்றும், 20 தேதிக்கு மேல் வரவு வைக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறார்கள்.. இல்லாவிட்டால் அடுத்த மாதத்துடன் சேர்த்து வழங்கவும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
அரசின் நடவடிக்கைகள் இவ்வாறாக இருந்தாலும், ஒருசாரார் மட்டும் வருத்தத்தில் உள்ளதாகவே செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அதில், முக்கியமானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள்.. மாற்றுத்திறனாளிகள் பலர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்தனர். ஆனால் அதில் பெரும்பாலான மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கவில்லையாம்..
4 சக்கர வாகனம்: காரணம், இவர்கள் எல்லாருமே 4 சக்கர வாகனத்தை வைத்திருப்பதாக கூறி, மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதாவது, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் 2 சக்கர வாகனங்களில் அவர்கள் பாதுகாப்பு நலன் கருதி, வாகனத்தின் 2 பக்கமும், கூடுதலாக 2 சக்கரங்கள் இணைக்கப்படும்.. அதனால், இதனை 4 சக்கர வாகனங்களாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வரும் நிலையில், அதனை நிஜமாகவே கார், வேன் போல, "4 சக்கர வாகனம்" என்று கருதி, மகளிர் உரிமை தொகை நிராகரிக்கப்பட்டு விட்டதாதாக சொல்கிறார்கள்.
ஏற்கனவே, தமிழக அரசு மகளிர் உரிமைத்தொகையை வழங்க பல்வேறுகட்டுப்பாடுகள் விதித்திருப்பதால் பலர் பெறமுடியாமல் திணறி வரும்நிலையில், மாற்றுத்திறனாளிகளும் அதிருப்திக்கு ஆளாகி உள்ளதாக கூறுகிறார்கள். தாங்கள் பயன்படுத்தும் 3 சக்கர வாகனங்களை விஏஓக்கள் கணக்கெடுப்பு செய்யும்போது, நான்குசக்கர வாகனம் இருப்பதாக பதிவு செய்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
ஆர்ப்பாட்டங்கள்: இதைக்கண்டித்து, கடந்த மாதம்கூட, 23 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன.. இதன், வாயிலாக, 2,000 மனுக்களும் மாவட்ட கலெக்டர்களிடம் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல, தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள், பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், "கர்நாடக மாநிலத்தில் கிரகலட்சுமி திட்டத்தில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய், மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் எத்தனை பெண்கள் இருந்தாலும், குடும்பத்திலுள்ள அனைத்து பெண்களுக்கு நிபந்தனையின்றி ரூ.500 வழங்கப்படுவதைபோல, தமிழகத்திலுள்ள அனைத்து மாற்று திறனாளிகள் குடும்பங்களுக்கும் நிபந்தனையின்றி உடனடியாக மகளிர் உரிமை தொகை வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
உதவித்தொகை: இந்நிலையில், அதிக அளவில் ஊனமுற்ற மாற்று திறனாளிகளுக்கு , அரசு விலையில்லாமல் வழங்கிய பெட்ரோல் ஸ்கூட்டரை காரணம் காட்டி, கலைஞர் உதவித்தொகை மறுப்பதை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது..
இதுகுறித்து அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர்உரிமைகளுக்கான சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் சொல்லும்போது, 3 சக்கர வாகனத்தை நான்கு சக்கர வாகனமாக கணக்கெடுப்பால், ராமநாதபுரத்தில் மட்டும் 2000 பேருக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை. இதை மறுபரிசீலனை செய்து, தகுதியுள்ளவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க அரசு உத்தரவிடவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications